Thursday, April 24, 2008

பாரதிதாசன் வாரம் - 2008-நாக.இளங்கோவன்


தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள்
(FAQs) - பகுதி 1

1) தனித்தமிழ் என்றால் என்ன?

பிற மொழிக் கலப்புத் தமிழ் மொழியில்


ஏற்பட்டுமொழியும் பேச்சும் சிதைந்து


போகின்ற சூழல்ஏற்பட்டுவிடாமல், மொழியின்


தனித்தன்மைகுன்றாது தமது எழுத்தைக் காத்துக்கொள்ளும் தமிழை தனித்தமிழ் எனலாம்.

2) தமிழ் என்பதும் தனித்தமிழ் என்பதும் வேறு வேறா?

இல்லை. தனித்தமிழே தமிழ்.

3) தமிழின் தனித்தன்மை குன்றினால் என்ன ஆகும்?

அ) செந்தமிழ்க்காப்பியம் தோன்றிய சேரநாட்டில்,தொல்காப்பியம் தோன்றியசேரநாட்டில்,திருக்குறள் தோன்றிய நாஞ்சில்நாட்டருகே உள்ளசேரநாட்டில், பிறமொழிக் கலப்பு கங்கு கரையின்றிஏற்பட்டதாலும், அதைத் தடுத்து நிறுத்தஅப்போதைக்கு ஏலாததாலும், அரசியல்மீது ஏறிப் பிறமொழி நுழைந்ததாலும்தமிழின் தனித்தன்மை சேரநாட்டில் குன்றியது,அதன்விளைவு மலையாளம் என்ற மொழிதோன்றியது 1100 ஆண்டுகளுக்குமுன்னர். அது தனி நாடாகவும்ஆகிப்போனது ஏறத்தாழ கி.பி 1300க்குப்பின்னர். இந்த வரலாற்றை அறிந்திருந்தும்அறியாததுபோல வாழ்ந்தால்பிழை நம்மதுதானே?


ஆ) தனித்தன்மை குன்றினால் எந்த ஒன்றிற்கும்பிற மொழிகளைச் சார்ந்தே வாழ வேண்டி இருக்கும்.மனிதனுக்கு அடிமை புத்தி வருவதற்கு மூலமே இதுதான். காட்டாக, விபத்தில்சிக்கி கை கால் ஊனமுற்றவர்கள் வாழ்க்கை முழுதும் சரவல் பட்டு சார்ந்துவாழ்வதைப்போல, மொழியைக் குன்ற விட்ட குமுகமும் ஆகிவிடும். மூச்சுஇருக்கும் வரை வாழ்விருக்கும்தான்.ஆனால் ஊனத்துடன் வாழ்வது எவ்வளவு பேருக்கு இன்பம்?

4) தனித்தமிழ் என்றால் அகராதியில் இருக்கும்சொற்களைப் பார்த்துப் பார்த்து,வேர்ச் சொல் ஆய்ந்து ஆய்ந்து,கலைச்சொல் கண்டு பிடித்துக்கண்டு பிடித்து எழுதுவதா?


இல்லை.

அ) எளிமையாக இருக்கும் தமிழை எல்லோரும் அறிந்ததமிழை நேர்த்தியாக எழுதுவதுதான் அடிப்படை.
ஆ) ஆங்கிலம், சமற்கிருதம் போன்ற அயல் மொழிகள்,மற்றும் தெலுங்கு, மலையாளம் போன்ற தமிழ்கெட்டுப் பிறவாக கிளைத்த கிளை மொழிகள்போன்றவற்றின் சொல்லும், எழுத்துக்களும்தமிழில் பாவாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுதெல்லாம் ஆங்கிலம் சமற்கிருதம்போன்றவை செய்யும் தீங்கு போதாதென்று,மலையாளம், தெலுங்கு போன்றவற்றை அறிந்தஎழுத்தாளர்கள் அதனையும் சேர்த்துக்குழப்பியடித்துத் தீங்கு செய்கிறார்கள்.


5) மலையாளம் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் பாதிப்பேதும் இல்லையே; பிறகுஏன் கவலைப்படவேண்டும்?

மலையாளம் தோன்ற ஆரம்பித்துப்பின்னர் நாடாக, தமிழ்த் தொடர்பைஅறுத்துக் கொண்ட 1300/1400க்குப்பின்னரான கால கட்டத்தில்குறிப்பாக 16 ஆம் நூற்றாண்டிற்கும்20 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டகாலத்தில் மலையாளத்தைப் பின்பற்றிதமிழகத்தில் மணிப்பிரவாளம்என்ற மொழி ஏற்பட்டிருந்தது.
சமற்கிருதப் புலமையே புலமை, பண்டிதம்,அறிஞம் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.மணிப்பிரவாள இலக்கியங்கள்மிகுந்தன. சமற்கிருதமும் தமிழும் கலந்தகலவையான மணிப்பிரவாளம்பேசுவது எழுதுவது நாகரிகமாக ஆகிசென்னை மாநிலம் மணிப்பிரவாளமாநிலமாக இருந்தது.
தனித்தமிழ் இயக்கம் தோன்றியிருக்கா விட்டால்தமிழ்நாடு என்பது வரலாற்றில்கரைந்து இருக்கும். இன்றைக்கு இந்தஅளவு கூட தமிழ் இருந்திருக்காது;இன்றைய தமிழ்நாட்டுக்குள்மணிப்பிரவாள மாநிலம் தோன்றியிருக்கும்.


தற்போது உலகில் ஓங்கி நிற்கும் ஆங்கிலத்தால் நமக்கு வேறுவழியில்லாததால்தீவினன ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இதற்கு ஆங்கிலத்தைக் குற்றம் சொல்லமுடியாது.நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

6) தனித்தமிழ் இயக்கம்தான் தமிழ்நாட்டைமற்றொரு பிரிவில் இருந்து காப்பாற்றியதா?

ஆமாம்.

7) காப்பாற்றுதல் என்றால் என்ன?

காப்பாற்றுதல் என்பதை இரு வகைப் படுத்துகிறார்செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரன்.அவரின் "தனித்தமிழ் இயக்கம்" என்ற நூலில்இப்படிச் சொல்கிறார்:

காவற்கடமை:
"ஒன்று, வளர்ந்து செழிப்படைவதற்குவேண்டிய ஆக்கச் செயல் வகைகளையெல்லாம்செய்தல். மற்றொன்று. பிறவற்றின் தாக்கம்,அழிப்புகளில் இருந்து காத்தல்.
முன்னது அகக்காவல். பின்னது புறக்காவல்.இருவகைக் காவலும் மேற்கொண்டால்அல்லாமல் மக்கள் வாழ்வு சிறப்படையாது. "
அவ்வாறே மொழிவாழ்வும். அகக்காவலும் புறக்காவலும் இல்லாமல்எடுப்பார் கை பிள்ளையாய் ஆகிப்போனது தமிழ்.
"மக்கள் இனக்கலப்பு தவிர்க்க இயலாமை போல,மொழிக்கலப்பும் தவிர்க்க முடியாததே. ஆனால்,தன்னையே அழித்துக் கொள்ளும் வகையில்எப்படி ஓரினம் மாற்றம் ஆகிவிடக்கூடாதோ,அப்படியே ஒருமொழியும் மாற்றம் ஆகிவிடவிட்டு விடக் கூடாது"


8) தனித்தமிழ் இயக்கம் என்பது என்ன? அது யாரால்தோற்றுவிக்கப் பட்டது?

பெருகிவந்த மணிப்பிரவாளம் ஏறத்தாழதமிழின் குரல்வளையைஇறுக்கியபோது, அதன் கேடுகளையும்வரலாற்றையும் உணர்ந்தநமது முன்னோர்கள், தமிழை மீட்கவும்,அதன் தனித்தன்மையைநிலை நிறுத்தவும், தமிழர்கள் அடையாளம்நிலைக்கவும் தோற்றுவித்தஇயக்கம் தனித்தமிழ் இயக்கம்.
தனித்தமிழ் இயக்கம்தவத்திரு மறைமலை அடிகளாரால்தோற்றுவிக்கப் பட்டது.


9) தனித்தமிழ் இயக்கம் தோன்ற முன்னோடியாகஇருந்தது யாது?

திருவிடர் கழகம் என்ற அமைப்பு.இது குறித்து செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் கூறுவதாவது:
//19-11-1908 இல் "திருவிடர் கழகம்" என்னும் அமைப்புதோற்றுவிக்கப்பட்டது. அதனை அமைத்தவர்"மறைத்திருவன் விருதை சிவஞான யோகிகள்"என்பவர் ஆவார். (திராவிடர் கழகம் வேறு,திருவிடர் கழகம் வேறு). 99 யாண்டுகள்உயிர்வாழ்ந்த அந்தப் பெருமகனார் பன்மொழிப் புலவர்.
குற்றாலத் தென்றலாய் தமிழுக்கு அமைந்தஇவ்வமைப்பு தோன்றியதும் குற்றாலத்தில்தான்.
இதன் தலைவராக திருவன் சீர்காழி கே.சிதம்பரமுதலியார் இருந்தார். துணைத்தலைவர்களாக இருந்தமூவர் வருமாறு.
திருவன் பூவை.கலியாண சுந்தர முதலியார்திருவன் ஏ.பால்வண்ண முதலியார்திருவன் மு.ரா.கந்தசாமிக் கவிராயர்
இக்கழக உறுப்பினர்களாக 59 பேர் கொண்டபட்டியல் உள்ளது.
அவர்களில்திருவன் இராவ்பகதூர் தியாகராச செட்டியார்,திருவன் வெ.ப.சுப்பிரமணிய முதலியார்திருவன் அரசஞ் சண்முகனார்திருவன் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளைமறைத்திருவன் சுவாமி வேதாச்சலம்(மறைமலை அடிகளார்)திருவன் மு.கதிரேசச் செட்டியார்திருவன் சோமசுந்தர பாரதியார் (நாவலர்)ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடத்தக்கவையாககுறிக்கப் பட்டுள்ளது.//
திருவிடரின்(திராவிடர்கள்) பழையவரலாறுகளையும் மொழியையும்(தமிழ்) ஆய்ந்து உண்மைச் சேதிகளைவெளிக் கொணருதலைஇன்றியமையா குறிக்கோள்களில் ஒன்றாகக்கொண்ட இந்தக் கழகத்தின்குறிக்கோள்கள், கட்டளைகள், செயல்பாடுகள்குறித்த பதிவுகளில்காணப்படும் தமிழ்ச் சொற்கள்அருஞ்சிறப்பு வாய்ந்தவை.


10) தனித்தமிழ் இயக்கத் தந்தைதவத்திரு மறைமலை அடிகளாரைப்பற்றிச் சிறிது அறிய முடியுமா?

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார்,பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார் ஆகியோரதுகீழ்க்கண்ட உரைகள் நமக்கு நிறைய அறியத்தருகின்றன.
அடிகளார் இளந்தைப் பருவத்தில்நாகையில் வெசிலி கல்லூரியில் உயர்பள்ளியில் கற்று வந்தார். பள்ளியில் தமிழ்பயின்றதோடு, பொத்தகக் கடைவாணிகராகவும் இருந்தார்.
பெரும் தமிழ்ப் புலமையாளர்திருவன் நாராயணசாமி அவர்களிடம்செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைச்செவ்வையாகக் கற்றார்.
ஒழுக்கத்துக்கு எவர்நடையைப் பின்பற்ற வேண்டும்? ஒழுங்கர்நடையைத்தானே?
மாசுக்கட்டுப்பாடு காற்றுக்கும் நீருக்கும்எவ்வளவு இன்றியமையாததோஅவ்வளவு இன்றியமையாதது,மொழிக்கு மாசுக்கட்டுப்பாடு வேண்டுதல்.
அக்கட்டுப்பாட்டைக் கட்டாயம்உண்டாக்க வேண்டும் என்ற அடிகளாரின்பேருள்ளத்தில் உருவானதே தனித்தமிழ் இயக்கம்.
தனித்தமிழ் கண்ட அடிகளார்உடலோம்பலில் தலை நின்றவர்;உணவு, உடை,உழைப்பு, ஓய்வு, உறக்கம், உலாவல்இன்னவற்றெல்லாம்ஓர் ஒழுங்கர். இருப்பிடம் அலுவலகம்தோட்டம் சூழல் இன்னவெல்லாம்தூசு தும்பு மாசு மறுவின்றித் திகழத்திட்டப்படுத்தி ஒழுங்குபடுத்திக்கொண்ட கடமையர்.
எழுதும் எழுத்து, பேசும் பேச்சு, நடக்கும் நடை,எடுக்கும் நூல், தொடுக்கும் மிதியடி இவற்றிலெல்லாம்ஒழுங்குமுறை கடைப்பிடியர். அந்தஒழுங்குள்ளத்தில் தோன்றியதே தனித்தமிழ் இயக்கம் என்று சொல்கிறார் புலவர்இரா.இளங்குமரன்.
வ.சுப.மாணிக்கனார் அவர்கள்,"அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம்தமிழ்த்தாயின் நெஞ்சு புரையோடாதும்,தமிழர் அறைபோகாதும் காத்தது.தமிழின் வயிற்றிலிருந்து முன்பு பலதிராவிட மொழிகள் கிளைத்துஅதன் பரப்பைச் சுருக்கியது போலமீண்டும் தமிழகத்துள் ஒரு புதியதிராவிட மொழி பிறந்து தமிழைக் குன்றிக்குலையாதவாறு தடுத்தது"என்று உரைக்கிறார்.


11) மறைமலை அடிகளார் தூயதமிழ்போற்றுபவர்களிடம் இருந்து"தமிழ் விடுதலை ஆகவேண்டும்" என்றுசொல்பவர்களையும், நல்ல தமிழ் செய்பவர்களைக்கேலி பேசுபவர்களையும் பற்றி என்ன சொல்கிறார்?

மறைமலை அடிகளாரை அவர்காலத்தில் கிடுக்காத,தாக்காத கீழ்மொழி தாசர்கள் குறைவு.அவர் சந்திக்காத கிடுக்கல்கள்கிடையாது. அது இன்றும் பொருந்தும்.
மறைமலை அடிகளார், தம் தமிழ்ப்பணியை"கலிகாலக் கொடுமை"என்று நகைத்தார்க்கு பதிலிறுக்கிறார்;
"பண்டு தொடங்கிப் புனிதமாய் ஓங்கி நிற்கும்நம் தனித் தமிழ்த்தாயைப் பிறமொழிச் சொற்கள்என்னும் கோடாரியினுள் நுழைந்து கொண்டு,இத்தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்கமுயல்வதுதான் *கலிகாலக் கொடுமை*!இத்தீவினை புரியும் இவர் தம்மைத் தடுத்து,எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்கமுன்நிற்கும் எம்போல்வாரது நல்வினைச்செயல் ஒருகாலும் கலிகாலக்கொடுமை ஆகாது என்றுஉணர்மின்கள், நடுநிலையுடையீர்"!


12) தமிழின் தனித்தன்மை பேணாமையால்எய்திய கேடு என்ன என்றுஅடிகளார் கூறுகிறார்?


மறைமலையடிகள் கூறுகிறார்:
"மக்களை விட்டு மொழியும், மொழியை விட்டுமக்களும் உயிர்வாழ்தல் சிறிதும் இயலாது.
எனது விருப்பப்படிதான் யான் பேசும்மொழியைத் திரித்தும், அயல்மொழிச் சொற்களோடு கலந்துமாசு படுத்தியும் வழங்குவேன்;
அம்மொழியின் அமைப்பின்படி யான்நடக்கக் கடவேன் அல்லன்' என்றுஒவ்வொருவனும் தனது மொழியைத்தன் விருப்பப்படி எல்லாம் திரித்துக் கொண்டுபோவானாயின் சிறிது காலத்தில்ஒரு மக்கட் கூட்டத்தாரிலேயே ஒருவரைஒருவர் அறிந்து கொள்ள முடியாதவகையாய் ஒவ்வொரு சிறு கூட்டத்திற்கும்ஒவ்வொரு புதுமொழி காலந்தோறும்உண்டாகி அம்மக்களை ஒன்று சேரவிடாமல்அவர்களைப் பல சிறு கூட்டங்களாகப் பிரித்து விடும்"


(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: