Wednesday, April 23, 2008

<>பாரதிதாசன் வாரம் - அனலை- திரு<>


தமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே
தமிழ் படித்தாயா?

தமிழ் படித்தேன் தமிழ் படித்தேன்
தமிழப் பெண் நானே.

தமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே
தமிழை ஏன் படித்தாய்?

தமிழ் "படித்தேன் " அதை உண்ணத்தான்
தமிழ் படித்தேன் நான்.

(தமிழ் "படித்தேன்" என்றால், தமிழானது ஒரு படி
அளவுள்ள தேன் போல் இனிப்பது என்பது பொருள்)

அமிழ்தைத் தந்தால் தமிழைத் தள்ளி
அதை நீ உண்பாயா?

அமிழ்தும் தமிழுக் கதிக இனிப்பா?
அதுவா எனை வளர்க்கும்?

தமிழ்தான் நீயோ? நீதான் தமிழோ?
தமிழப் பெண்ணே சொல்!

தமிழையும் பார் என்னையும் பார்
வேற்றுமையே இல்லை!

---------------
என்றும் அன்புடன்
அனலை- திரு

*****************************

தமிழ்நாடே! என் தாய்நாடே! நீ
தமிழைச் சேர்த்தாய் எங்கள் உயிரில்
அமிழ்தைச் சேர்த்தாய் எங்கள் வாழ்வில்
தமிழ்நாடே நீ வாழ்க! வாழ்க!

முத்தமிழ் அன்னாய்! முழுதும் நாங்கள்
ஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது
செத்துக் கிடக்கும் எமக்கும் நல்லது
முத்தமிழ் அன்னாய் வாழ்க! வாழ்க!

--

---------------
என்றும் அன்புடன்
அனலை- திரு

No comments: