Monday, April 21, 2008

<>பாவேந்தர் குறித்த கருத்துச் சிதறல்கள்<>


<>பாவேந்தர் கண்டிப்புமிக்க தந்தை<>
குழந்தையினும் குழந்தையாக மாறி விளையாடும்
பழக்கம் கொண்டிருந்தார் எந்தந்தையார்.
குழந்தை எதைத் கேட்டாலும் இல்லையென்னாது
தரும் உள்ளம் அவருக்கு.
கதை சொல்வதிலே ஈடுபாடு கொண்டு
சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார்.
எங்கட்குத் தெரிந்த மெட்டில் பாட்டு வேண்டும்
என்று கேட்ட உடனே எழுதித் தருவார்.
தின்பண்டங்கள் வாங்கி அன்புடன் அளிப்பார்.
முறுக்குச் சுட்டு வைப்பார் அன்னையார்.
தின்று கொண்டே இருப்போம். எண்ணி எடுத்து
அடுக்கி வைக்க வேண்டும் என்றால் அதற்கு இடம்
அளிக்க மாட்டார். விரும்பித் தின்றால் அதனால் தீமை
வி¨ளாது என்பது அவருடைய கோட்பாடு.
எங்கட்கு இதனால் கொண்டாட்டம்.
அன்பு செலுத்துவதில் எந்த அளவுக்கு முனைப்பு
உண்டோ, அந்த அளவுக்கு மேல் பன்படங்கு கண்டிப்பும்
உண்டு. அவரிடம் பல சமயங்களில் நாங்கள் வாங்கிக்
கொண்ட அடிகள் நினைவிருக்கிக்றன.

ஆமாம்! கண்டிப்பு மிக்க தந்தை - கரையில்லாத
அன்புக் கடலும் அவரே!
-மகன் மன்னர் மன்னன்

No comments: