Monday, April 21, 2008

<>புரட்சிக் கவிஞரின் கனவு - அன்பு<>



பெண்களுக்கு நான்கு

பண்புகளை விதித்தது

சமூகம். அவை அச்சம்,

நாணம், மடம், பயிர்ப்பு

என்பன. இதில் அச்சம்

என்பது பயத்தையும்,

நாணம் என்பது வெட்கத்தையும்


குறிக்கும். இதில் வரக்கூடிய மடம் என்பதற்கு என்ன பொருள் என்பதை பார்க்கும் போது "சொல்லிக் கொடுத்த நெறிப்படி நடத்தல் என்று பொருள்". அதாவது அவளாக சிந்தித்துப் பார்க்கக் கூடாது. ஏன் இப்படித்தான் நடக்க வேண்டுமா ? என்று எண்ணிப் பார்க்க கூடாது. இஃது ஒரு வகை அறியாமை.. அந்த அறியாமை என்னும் பள்ளத்திலே பெண் இனம் இருப்பது சமூக அமைப்புக்கு நல்லது என்று கருதினர் பழமைவாதிகள். பயிர்ப்பு என்பது அருவருப்பு, அதாவது அறிமுகம் இல்லாதவற்றிலிருந்து விலகி நிற்பது. பெற்றோர் முடிவு செய்யும் இளைஞனுக்கு அல்லது முதியவனுக்கு கழுத்தை நீட்டு என்றால் நீட்டுவது, மாமியாரிடம் குட்டுபடவும், கணவனால் வெட்டுப்படவும், மற்றவரால் திட்டப்படுவும் வாழ்க்கைப்பட்டவள். புகுந்த வீட்டில் மாட்டுக்கும், நாய்க்கும் உள்ள மரியாதை கூட அவளுக்கு இல்லாமல் போகலாம். அவள் ஆமையாக புலனடக்கி வாழ வேண்டும். ஊமையாக பேசாமல் இருக்க வேண்டும். இந்த நிலையில் பாவேந்தரின் பாட்டு ஒலிக்கிறது..


"தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில்தள்ளி அடைக்கப்படும் குதிரைக்கும்கனைத்திட உத்தரவுண்டு - வீட்டில்காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்"


இந் நிலை மாற பெண்கள் புலிநிகர்த்தவராக ஆக வேண்டுமென்று பாரதிதாசன் கருதினார். பெண்கள் நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுமாக விளங்க வேண்டும் என்று பாரதியார் கூறினார்.பாவேந்தர் என்ன கூறுகிறார்..
" சேவல் என நிமிர்ந்து சிறுத்தையெனப் பகையைச்சீறும் குழந்தைகளைப் பெற்றெ - நீசெல்வம் பலவும் மிக உற்றே - நல்லகாவல் இருந்துவளம் தாவும் திராவிடத்தைக்காப்பது காண வேண்டும்"
இன்று பெண்கள் இல்லாத துறை என்று ஏதுமில்லை. இவர்களின் அணிவகுப்புதான் புரட்சிக் கவிஞரின் கனவு..
அன்புடன்,


அன்பு.


********************
உலகக் கவிஞர்களோடு பாரதிதாசன்:

பாரதிதாசனை உலகக் கவிஞர்கள் பலரோடு ஒப்பிட்டுப்
பாராட்டியுள்ளனர். குறிப்பாகக் கவிஞர்களுக்குச்
சென்னையில் நடந்த நிதியளிப்பு விழாவினையொட்டி
வெளியிடப்பட்ட கவிஞர் மலர் (28.07.1946)
இதற்கு மதிப்பீடுகள் பலவற்றைத் தந்துள்ளது.

"மதங்களிலும் பழைய ஆசாரங்களிலும் ஊறிக்கிடந்த
மக்களிடையே இவருடைய பாடல்கள் ஒரு பெரிய
மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கின்றன.
ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி, அமெரிக்கப்
புரட்சிக்கவி வால்ட்விட்மன், தமிழ்நாட்டுப் புரட்சிக்கவி
பாரதிதாசன்.

இக்கவிஞரைப் பலதுறையிலும் பாராட்ட வேண்டியது
தமிழ்மக்களின் கடமையாகும்." என்று தமிழ்நாட்டு
வால்விட்மன்; என்னுந்தலைப்பில் கவிமணி
தேசியவிநாயகம் குறிப்பிட்டுள்ளார். (கவிஞர் மலர் ப.12)

'மாயக்காவ்ஸ்கி' என்னும் தலைப்பில் ஏ.பி.
சனார்த்தனம் தம் கட்டுரையில் (ப.83) "மாயக்காவ்ஸ்கி
இலக்கியக் கவிதைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை.
குழந்தைப் பாட்டுக்கள், காதல் கீதங்கள் ஆகியவைகளை
இயற்றினார். ஆனால் இயந்திரங்களின் ஓசை,
பாட்டாளியின் உழைப்பு, புரட்சியின் வேகம்,
சமுதாய முன்னேற்றம், எழுச்சி இவைகளுக்குத் தான்
அவர் கவிதைகளில் முதலிடம்."

"பாட்டாளியின் பாசறைக்குத் தன் திறமையைக்
காணிக்கையாகக் தருகிறவனே கவிஞன் என்பது
அவரது முடிந்த முடிவு. இந்நாள் திராவிடத்திலும்
ஒரு மாயக்காவ்ஸ்கியைக் காண்கிறோம். அவர்தான்
பாரதிதாசன்! புரட்சிக் கவிஞருக்கு இன எழுச்சி,
அரசியல், அறிவியல், சமுதாய விடுதலை
குறிக்கோள், கவிஞரின் பாக்கள் மக்கள்
உரிமைப் போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்தும்
தன்மையுடையன."என்று ஒப்பீடு செய்கிறார்.

'புரட்சியில்பூக்கும் புது உலகு' என்னும்
கட்டுரையில் (ப.37), இரா. நெடுஞ்செழியன்,
"பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞராக ஆக்கியது
அவரது சூழ்நிலையேயாகும். ரஷ்யா ஒரு
புஷ்கினையும், ஆங்கில நாடு ஒரு ஷெல்லியையும்,
பிரான்சு ஒரு ஹ_கோவையும் அமெரிக்கா ஒரு
வால்ட்விட்மனையும் கண்டவாறு திராவிடமும்
ஒரு பாரதிதாசனைக் கண்டது."

என்றும், 'கொலைவாளினை எடடா' என்னும்
கட்டுரையில் (ப.48) க. அன்பழகன், "ஆங்கில
நாட்டுக் கவிஞர் ஷெல்லியைப் போல,
அமெரிக்க நாட்டுக் கவிஞர் வால்ட்விட்மனைப்
போல இஸ்லாமிய இனத்திற்குக் கிடைத்த கவிஞர்
இக்பாலைப் போலதிராவிட நாட்டிற்குத் தமிழ்
இனத்திற்குக் கிடைத்த ஒப்பிலா அறிஞர் புரட்சிக்;
கவிஞர் பாரதிதாசன்' என்று போற்றுகிறார்.

அன்புடன்,
அன்பு.
********பாவேந்தர் வாரம் -21*****************************
பாவேந்தரின் புரட்சி மனத்தை அவருடைய படைப்புகளிலிருந்து காணலாம். பல்வேறு படைப்புகளில் வெளிப்படும் அவரின் பெண் பாத்திரங்கள்..
வஞ்சி - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்அமுத வல்லி - புரட்சிக் கவிவிஜயா - வீரத்தாய்தங்கம் - குடும்ப விளக்குநகைமுத்து - குடும்ப விளக்குகிள்ளை - காதலா, கடமையாசுப்பம்மா - தமிழச்சியின் கத்திஅன்னம் - பாண்டியன் பரிசுபூங்கோதை - எதிர்பாராத முத்தம்
இப் படைப்புகள் தேவை ஏற்படும் போது கடும்புயலாக உருக் கொள்கின்றனர். மற்ற சமயங்களில் குளிர் தென்றலாய் இதம் செய்கின்றனர். பெண்மையின் பன்முக ஆற்றலை இப்பாத்திர படைப்புகள் காட்டுகின்றன.
அன்புடன்,

அன்பு.

*********

பாவேந்தர் வாரம் -22***********************குழந்தைப் பருவதில் கற்கும் கல்வி, பசுமரத்தாணி போன்றது என்பர் சான்றோர். பாவேந்தர் பாரதிதானும் குழந்தைப் பருவத்திலேயே மொழி உணர்வு வேண்டும், இன உணர்வு வேண்டும் என்று கருதினார்.
" இளஞ்சேரனை நீ யார் என்று கேட்டுப்பதிலை எதிர்பார்த்திருந்தார். அவனோதன் மார்பு காட்டி " நான் தம்பி" என்றான்.
'தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி" என்றேஇயம்பி அமிழ்து வந்தாள்.
இளஞ்சேரன் கைக்குழந்தை. இளஞ்சேரனின் தமக்கை அமிழ்து ஆறு வயது. இந்த வயதில் எப்படி மொழி உணர்வு வந்தது. பெற்றோர் கொண்ட உணர்வு வழிவழியாய் வருதலையே கவிஞர் இங்கனம் காட்டுகிகிறார்.
குழந்தையை வளர்க்கும் நெறி பற்றியும் பாரதிதாசன் கூறுகிறார். " ஆல் ஒடிந்து விழுந்தாலும் தோள்கள் தாங்கும்" வலிமை பிள்ளைகளுக்கு வேண்டும் என்கிறார்.
" இன்னம் தூக்கமா - பாப்பாஇன்னம் தூக்கமா?பொன்னைப் போல வெயிலும் வந்ததுபூத்த பூவும் நிறம் குறைந்ததுஉன்னால் தோசை ஆறிப் போனதேஒழுங்கெல்லாமே மாறிப் போனதே"
என்று நல்ல நெறிகளை குழந்தைகளுக்கு உணர்த்தும் பாடல்களை பல புனைந்தார்.
" இன்று குழந்தைகள் நீங்கள் எனினும்இனி இந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்குன்றினைப் போல் உடல் வன்மை வேண்டும்கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்"
என்று குழந்தை மனத்திலேயே தீமையை எதிர்த்துப் போராடும் விதையை விதைத்து விடுகிறார்.
அன்புடன்,

அன்பு.

*********************

பாவேந்தர் வாரம் -23******************************
பாரதிதாசனும் புதுமைப்பித்தனும்தி.க.சி.
பாரதிதாசனைப் பற்றிய புதுமைப்பித்தனின் மதிப்பீட்டை எனக்குத் தெரிந்த அளவிற்குக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாரதிதாசன் 29.04.1891ல் பிறந்து 21.04.1964ல் மறைந்தார். 73 ஆண்டுகள் பாரதிதாசன் வாழ்ந்துள்ளார். புதுமைப்பித்தன் 1906ல் பிறந்து 1948ல் மறைந்தார். புதுமைப்பித்தன் வாழ்ந்தது 42 ஆண்டுகள். பாரதிதாசன், புதுமைப்பித்தனைவிட 15 ஆண்டுகள் மூத்தவர் எனினும் இவர்கள் இருவரும் சமகாலத்தவர்கள். நெருங்கிய நண்பர்கள்.
1931க்குப் பின்பு நடத்திய மணிக்கொடியில் பாரதிதாசனும் பற்பல சிறந்த கவிதைகளைப் படைத்துள்ளார்.
மணிக்கொடியில் வந்த பாரதிதாசன் கவிதைகளை பாரதியின் பிரதான சீடர்களில் ஒருவராகவும், பின்னாளில், சக்தி, மஞ்சரி முதலிய பத்திரிக்கைகளின் ஆசிரியராக இருந்த தி.ஜ.ர.வும், பேராசிரியர் கே. சுவாமிநாதனும் மற்றும் பலரும் மிக உயர்வாக மதித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போலவே மணிக்கொடி எழுத்தாளரான புதுமைப்பித்தனும், பாரதிதாசனை கவிதா ரீதியிலும், கருத்து ரீதியிலும் பாரதியாருக்குப் பின் வந்த கவிஞர்களில் தலைசிறந்தவராகக் கருதினார். ஏனெனில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பாரதியின் உயிர்நாடியான கொள்கைக்கு தமது வாழ்நாள் முழுவதும் பாரதிதாசன் விஸ்வாசமாய் இருந்தார் என்பதைப் புதுமைப்பித்தன் நன்கு உணர்ந்திருந்தார்.
பாரதிதாசனை ஒரு புதுமைக் கவி என்றும், புரட்சிக் கவி என்றும், புதுமைப்பித்தன் கருதினார். பாரதிதாசனின் பாண்டியன் பரிசு என்ற நூலுக்குப் புதுமைப்பித்தன் எழுதிய மதிப்புரையே இதற்குச் சான்றாகும்.
“தமிழர்களுக்கு பாரதியார் விட்டுச்சென்ற செல்வங்களில் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், இவற்றைத் தவிர பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினமும் ஒருவர்” என்று அழுத்தம் திருத்தமாக புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தை இன்றைய தமிழ் இலக்கியப் படைப்பாளர்களும், ஆய்வாளர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். இது புதுமைப்பித்தனுக்கோ பாரதிதாசனுக்கோ நியாயம் செய்வதாகாது.
40களில் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் முல்லை முத்தையா நடத்தி வந்த முல்லை என்னும் மாத இதழ் அலுவலகத்தில் பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுண்டு. இருவரும் மிக நெருங்கிய தோழர்களாக விளங்கினர் என்பதையும் முல்லை இதழின் ஆசிரியராக இருந்த தொ.மு.சி ரகுநாதன் பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.
29.07.1946ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் அறிஞர் அண்ணா முயற்சியால் பாவேந்தர் பாரதிதாசனாருக்கு, நிதி திரட்டப்பட்டு, ரூ. 25,000 பொற்கிழி வழங்கப்பட்டது. இந்த நிதி திரட்டும் குழுவில் புதுமைப்பித்தனும் ஒரு உறுப்பினராக இருந்தார் என்பதும், புதுமைப்பித்தனும் தன் பங்காக ரூ.100/- அன்பளிப்பு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்று புதுமைப்பித்தன் எந்தப் பத்திரிக்கையிலும் வேலை பார்க்கவில்லை. மிகுந்த பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்தார். அந்த நிலையிலும் புதுமைப்பித்தன் ரூ. 100/- அன்பளிப்பு செய்துள்ளார் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.
பாரதிதாசனும், தன்மானம், பகுத்தறிவு, சமதர்மம், சமூக நீதி, இவற்றுக்காகக் கொள்கை உறுதியுடன் போராடிய ஒரு பேனா வீரர் என்பது புதுமைப்பித்தனின் மதிப்பீடாகும். அப்பொழுது பாரதிதாசன், திராவிட இயக்கக் கொள்கையின் பிரதான போர் முரசாக இருந்தார் என்பது புதுமைப்பித்தனுக்குத் தெரியும் என்றாலும், அரசியல் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ் வளர்ச்சிக்கு பாரதிக்குப் பின்னால், மிகச்சிறந்த பங்காற்றிய கவிஞர் பாரதிதாசன் என்பதே புதுமைப்பித்தனின் உள்ளக்கிடக்கையாகும். எனவேதான் பாரதிதாசன் மீது மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்.
இருவருமே, புதிய பாதையில் புரட்சிகர உணர்வுடன் தமிழ் இலக்கியத்தைச் செழிக்கச் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கம் கொண்டவர்கள்.
பாரதியாருக்கும், பாரதிதாசனுக்கும் இடையே உள்ள முக்கியமான கொள்கை வித்தியாசம் என்னவென்றால், பாரதி ஆத்திகர், பாரதிதாசன் நாத்திகர். பாரதியின் மறைவுக்குப் பிறகு, பாரதிதாசன் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து, பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும், ஒரு நாத்திகராக மாறியபொழுதிலும், தமது இறுதி மூச்சு உள்ள வரையில், பாரதியாரைத் தமது குருநாதராகவே பாரதிதாசன் கொண்டாடினார் என்பது மனங்கொள்ளத்தக்கது. தமது குருநாதர் பாரதியாரை யாராவது இழிவாகப் பேசினால், பாரதிதாசன் இம்மியளவும் பொறுத்துக்கொள்ள மாட்டார். எப்போதும் பாரதியின் லட்சியங்களைப் பரப்பும் தொண்டனாகவே பாரதிதாசன் தம்மைக் கருதினார்.
புதுமைப்பித்தனைப் பொறுத்த வரையில் அவர் ஆத்திகரா? நாத்திகரா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் பண்டித ஜவஹர்லால் நேருவைப் போல ஒரு நிரீஸ்வரவாதியாகவே வாழ்ந்தார் எனலாம்.
காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற புதுமைப்பித்தனின் கதைகளே அதற்குச் சான்றாகும். பாரதிதாசன் பழுத்த நாத்திகராக இருந்தார். எனினும் இருவரும் பரஸ்பர அன்பும், மதிப்பும் கொண்டிருந்தனர்.
ஆனால், புதுமைப்பித்தன் பாதையில் நவீன இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்கிற எழுத்தாளர்கள், பாரதிதாசனைப் புறக்கணிப்பதையே தம்முடைய இலக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளனர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களையும் கண்மூடித்தனமாக வெறுத்து ஒதுக்குகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் பாரதிதாசனை மட்டும் அன்றி, புதுமைப்பித்தனையும் அவமதிக்கின்றனர் என்பதே என் கருத்தாகும்.
பாரதியும், பாரதிதாசனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் பெரும்பாலும் கருத்தொற்றுமை கொண்டவர்கள். பாரதிதாசன் கவிதைத் துறையிலும், புதுமைப்பித்தன் சிறுகதைத் துறையிலும் மாபெரும் சாதனையாளர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இனவெறியும், ஜாதி வெறியும், மதவெறியும் தலைவிரித்தாடும் இன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் பற்றும் சமநீதி உணர்வும் மங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் மனித நேயத்தையும், மனித குல விடுதலையையும், ஒற்றுமையையும் உயர்த்திப் பிடித்த பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான கலங்கரை விளக்குகள் ஆவர்.
தமிழில் நவீனத்துவம் என்றும் புதுமைப்பித்தன் பாதையில் தமிழ் இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்றும் கூறிக்கொள்ளும் படைப்பாளிகளும், வேட்பாளர்களும், பாரதியில் இருந்து பாரதிதாசனைப் பிரித்துப் பார்ப்பதும், பாரதிதாசனில் இருந்து புதுமைப்பித்தனை பிரித்துப் பார்ப்பதும் போகாத ஊருக்கு வழி சொல்வதாகும் என்பதை உணர வேண்டும்.
அன்புடன்,
அன்பு
பாவேந்தர் பார்வையில்....

இன்று கட்டாயக் கல்வி என்பது எந்த அரசாங்கம் வந்தாலும் சொல்லும் முதல் வாக்குறுதி, ஆட்சிக்கு வந்த பின் அது செயல்படுத்தப்படுமா என்பது வேறு விசயம். இன்று நடப்பதை அன்றே சொன்னவர் தான் நம் பாவேந்தர்..

கட்டாயக் கல்வி(2)**************************

பன்றி எதற்குத் தெருவில் வந்தது?
பாட்டையி லுள்ள கழிவை உண்ண.
என்ன கழிவு தெருவில் இருக்கும்?
இருக்கும் பிள்ளைகள் வௌிக் கிருந்தனர்.

என்ன காரணம் அப்படிச் செய்ய?
இருக்கும் பெற்றோர் ஒழுக்க மற்றோர்.
சின்ன நடத்தை எப்படித் தொலையும்?
சிறந்த அறிவு பெருக வேண்டும்.

அறிவை எப்படி அடைய முடியும்?
அனைவர் தாமும் படிக்க வேண்டும்.
நிறைய எவரும் படிப்ப தெப்படி?
நீள முயன் றால் முடியும்.

குறைகள் தீர முயல்வ தெப்படி?
கூட்ட மக்கள் கிளர்ச்சி வேண்டும்.
கறைகள் போகா திருப்ப தென்ன?
கட்டாயக் கல்வி கிட்டாமை தான்.

அன்புடன்,
அன்பு.
***********************************
பாரதிதாசனின் தமிழ்ப்பற்று: (3)

உலக கவிஞர்கள் வரிசையில் முன்நிற்கும் பாரதிதாசன்
தமிழை உயிராக, உடலாகக் கொண்டு வாழ்ந்தவர்.
கவிஞர்கள் தமிழில் பாடினார்கள். ஆனால் இவர்
தமிழைப் பாடினார். இவரைவிடத் தமிழை அதிகம்
பாடியோர் இல்லை எனலாம்.

"தமிழுக்கு அமுதென்று பேர்! அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்"
என்ற தமிழ் உணர்வுக் கவிதைகளைக் கொடுத்தவர்.
மேலும் தமிழை

"செத்தாலும் தமிழ்ப்படித்து சாக வேண்டும் இல்லையெனில்
என் சாம்பலிலும் தமிழ்மணம்தான் வீச வேண்டும்" என்று
தாய்மொழியின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்பையும்
உலகறிய வைத்தவர்.

அன்புடன்,

அன்பு
********************************************************
பாவேந்தர் தமிழருக்கு மட்டும் சொந்தமா ? -(4)

இல்லை இல்லை இன வேறுபாடு இல்லாமல் எங்கெல்லாம்
மக்கள் துன்பப்படுகின்றார்களோ, அல்லல் படுகின்றார்களோ
அந்த மக்களுக்கெல்லாம் ஆதரவுக் கரம் நீட்டியவர் நம்
பாவேந்தர் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் பாடல்...

1934இல் சனவரி மாதம் 15ஆம் நாள் பீகாரில் மிகக்
கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அல்லற்படும்
பீகார் மக்களுக்கு ஆதரவு திரட்ட அவர் நெஞ்சம்
விழைய "இயற்கைத் தேவியின் கோபம்" என்னும்
தலைப்பில் ஒரு பாடலை எழுதினார். . இயற்கையை
ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி அந்தப் பெண் தன்னிடம்
சொல்வதாகப் பாடலைத் தொடங்குகிறார்.

"குடமும் புனலும் நிலையிற் சாய்தல் போலே
குடிலும் ஏழைக் குலமும் சாயுங்காலே
படையால்மாளும் பகைபோல் மாளக்கண்டேன்
பணமும் பிணமும் மண்ணில் புதையக் கண்டேன்
தடமும் வீடும்சமமே யாதல் கண்டேன்
சதையும் மண்ணும் இரத்தக் குமிழும் கண்டேன்
மாங்கீர் சீதா மார்முகி சபர்புரி ஊரும்
மதுபான் மோத்கரி சுமசுதகிரி என்றாரும்
ஆங்கே பற்பல ஆயிர மைல்களிலன் எல்லை
அழகும் பொழிலும் தெருவும் வீடும் இல்லை
ஏங்கிய மைந்தர் தாயொடு வெளியில் நின்றார்
எத்தனை ஆயிர மக்கள் மண்ணிற் சென்றார்!
தாங்கிட வாரீர் பீகார் மக்கள் தம்மைத்
தாரீர் பொருளை எதிர்பார்க்கின்றார் உம்மை"

என்று பீகார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட
உணர்வுகளை தன் எழுத்தில் வெளிப்படுத்தி
அனைவரது துயரத்திலும் பங்கேற்றார்.

அன்புடன்,

அன்பு.
******************************************
<>பாவேந்தர் பார்வையில் தமிழன் ...(5)<>
நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்!
கல்வியில் என்னை வெல்ல நினைப்பதும்
ஏன் ஏன் ஏன்?

பல்லுயிர் காக்கும் எண்ணம் எனக்குண்டு
பார் பார் பார்!
செல்வத்திலே என்னை வெல்ல நினைப்பவன்
யார் யார் யார்?

சொல்லுடல் உள்ளம் ஞாலந் தாங்கும்
தூண் தூண் தூண்!
புல்லர்கள் என்னை வெல்ல நினைப்பது
வீண் வீண் வீண்!

தொல்லுல குக்குள்ள அல்லல்அ றுப்பதென்
தோள் தோள் தோள்!
வல்லவன் என்னை வெல்ல நினைப்பவன்
தூள் தூள் தூள்!

அன்புடன்,
அன்பு
***************************************
<>இயேசு மொழிந்த தெள்ளமுது-(6)<>

பெண் கல்வி, பெண் விடுதலை, கைம்பெண் மறுமணம்,
குடும்ப நலம், சமூக நீதி, சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம்
ஆகிய சீரிய கொள்கைகளை தனது கவிதைகள் மூலம்
வெளிப்படுத்தியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

பாரதிதாசன் ஒரு நாத்திகர், பிறப்பால் இந்து. இருந்தபோதும்
கிறிஸ்தவ கொள்கைகள் மீது ஏற்பட்ட பற்றுதல் அல்லது
ஈடுபாட்டின் காரணமாக ‘இயேசு மொழிந்த தெள்ளமுது’
என்ற தலைப்பில் ஒரு கவிதை வடித்துள்ளார். இந்தியாவில்
கிறிஸ்தவ மதத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது
ஒன்றே ஒன்று மட்டும்தான். அதுதான் ‘சாதி’ என்ற தனது
ஆதங்கத்தை இக்கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அவற்றில் சில வரிகள்…

மேதினிக்கு சேசுநாதர் எதற்கடி தோழி? - முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா- அந்தப்
பாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி? - இந்த
பாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்
ஏதுக்கு நன்மைகள் ஏற்றவில்லை உரை தோழி - இங்கு
ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா
ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி தோழி? - அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி - அட
முன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி? - சட்டம்
நால்வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்
ஆசை மதம் புகப் பேதம் அகன்றதோ? தோழி - அந்தத்
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அதைப்
போதாக்குறைக்கு முப்போகம் விளைத்தனர் தோழா - அடி
எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர் தோழி? - அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா…
பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன தோழி? - இவை
பாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா - இங்கு
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு
நெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன தோழி? - தினம்
நேர்மையில் கோயில் வியாபாரம் செய்து தோழி - அந்தக்
கோல நற் சேசு குறித்தது தானென்ன தோழா? - ஆஹா
கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா - அந்த
ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர் - எனில்
அன்னியர், தான் என்ற பேதமில்லாதவர்


அன்புடன்,
அன்பு
*********************************************
<>பாரதிதாசன் பார்வையில் தமிழ் சினிமா...(7)<>


இன்று தமிழ் சினிமா விஞ்ஞான வளர்ச்சியில் புதிய
சாகப்தம் படைத்துள்ளது என்றாலும்கவிஞர் வாழ்ந்த
காலத்தில் தமிழ் சினிமாவின் நிலை என்ன?

சினிமா எப்படிஇருக்கும் என்று, ஒரு சினிமாவை
பார்த்துவிட வேண்டும் என்று மிக ஆவலாக இருந்திருக்கிறார்
பாவேந்தர். அதனை இப்படி வெளிப்படுத்துகிறார்:

உருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே
ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்
திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பி யர்கள்
தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்,
"இருவிழியால் அதுகாணும் நாள்எந்த நாளோ,
என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,
இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
எதிர்வைக்கும் நாள்எந்நாள்" என்றுபல நினைத்தேன்.
ஒலியுருவப் படம்ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்;
ஓடினேன்; ஓடியுட்கார்ந் தேன்இரவில் ஒருநாள்.


அவர் காலத்தில் வெளிவந்த பேச்சு இல்லாமல் ஆங்கிலப்
படத்தை கண்டு மெய்மறந்ததை இப்படி வெளிப்படுத்துகிறார்:

புலிவாழும் காட்டினிலே ஆங்கிலப்பெண் ஒருத்தி,
புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை
மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி
வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்
எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை
எழில்முதுகிற் கைவைத்தான்! புதுமைஒன்று கண்டேன்.
உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,
உயிர்அதிர்ந்த காரணத்தால் உடல்அதிர்ந்து நின்றே,
தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது
சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்
சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்
சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!
களங்கமிலாக் காட்சி,அதில் இயற்கையெழில் கண்டேன்!
கதைமுடிவில் யுபடம்ருஎன்ற நினைவுவந்த தன்றே!


அதன் பின் இந்தியாவிலும் சினிமா தொழில் நுட்பம் பெருகி
பல பேசும் படங்கள்வெளியாக தொடங்கி அது தமிழிலும்
வந்தபோது தமிழ் சினிமா தனக்கென ஒரு பாதையை
வகுத்துக் கொண்டது. தான் கண்ட கனவு நனவாதைக்
கண்ட கவிஞர்

"இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
எதிர்வைக்கும் நாள்எந்நாள்"


என்றார். ஆனால் காலங்கள் செல்லச் செல்ல தமிழ் சினிமாவின்
நிலையைக் கண்டு மனம் நொந்து, தான் கண்ட கனவுக்கு
நேரெதிராக படங்கள் வருகின்றனவே என்று எண்ணி இப்படி
எழுதுகிறார்...

என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!
மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்,
அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!
கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை

கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!

பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்!
மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.
இரக்கமற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

இன்று தமிழ் படங்களில் நாதா, அத்திம்பேர், மட்டும்
இல்லை பாவேந்தர் கண்ட தமிழும் இல்லை. ஆனால்
பாவேந்தர் கூறியதுபோல் மற்றவைவெல்லாம்
அப்படியே உள்ளன.

படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்
பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,
படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!
பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ்நா டென்னும்இள மயிலும்
படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!

என்று மிக நொந்து போய் இருப்பது இன்றளவும்
நிறைவேறவில்லை என்பது மட்டும் உண்மை.

அன்புடன்,

அன்பு.
********************
Tue, Apr 22, 2008 at 10:59 PM
<>பாரதிதாசனைப் பற்றிய தவறான கருத்துக்கள்:<>


புதுச்சேரியில் தோன்றிய புயலை சிலர் மென்காற்று,
வறண்ட மேகம் என்று பாரதியை உயர்த்தியும், தாசனை
இகழ்ந்தும், தாசன் உலக கவிஞரே இல்லை என்ற
மாயையைத் தோற்றுவித்தனர். அவர்களில் வ. சுப்பிரமணியம் என்பவர்

"எங்கேயோ (புதிய ருஷ்யா) அடிமைச்சங்கிலி அறுந்ததற்
காக இங்கே கவிஞன் குதூகலிக்கவில்லையா?
பாரதிதாசனிடம் காணமுடியாத இந்த ~உலகப்பொதுமை
அல்லது ~அகிலத்துவம; பாரதியின் தேசியப் பாடல்களில்
காணக்கூடிய தனிச்சிறப்பு" என்று தனது 'வாழ்வியல்
கவிஞர்கள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
உலகப்பொதுமை அல்லது அகிலத்துவம் என்பதைப்
பாரதிதாசனிடம் காணமுடியாது என்பது இவரது
கருத்தாக உள்ளது.

பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. சீவானந்தம்
அவர்கள்"பொது மக்களின் ப+ர்ணக்குரல்
பாரதிதாசனின் பாடல்களில் இன்று கேட்க
வேண்டுமென்று வர்க்க உணர்ச்சியும் அரசியல்
பேதமும் கொண்ட பொதுமக்களின் சார்பில்
வேண்டிக் கொள்கிறேன். ஜார் வீழ்ச்சியைப்
பற்றி பாரதி பாடினான். இட்லர் வீழ்ச்சியைப்
(பாசிச வீழ்ச்சியைப் பற்றி) பாரதிதாசன் பாடியிருக்க
வேண்டும்.

பிஜித்தீவு கரும்புத் தோட்டக் கஷ்டத்தைப் பற்றி
பாரதி பாடினார். வங்கப் பஞ்சத்தைப் பற்றி பாரதிதாசன்
பாடியிருக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

நான்கு பேர் ஒருவரை நல்லவர் என்று புகழும் போது
இரண்டு பேர் கண்டிப்பாக இகழ வேண்டும் என்பது
தானே நம் மண்ணின் சிறப்பு.

அனைத்துலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தாய்
உள்ளத்தோடு பாடியவர் பாரதிதாசன் ஆவார்.

அன்புடன்,

அன்பு.
*******************************************
அன்பினிய அன்பு,

நீங்கள் எழுதிய இதே கருத்துக்கு வலுச் சேர்க்க‌
புதுவையின் மைந்தர் மிகத் தெளிவான,ஆக்கபூர்வமான‌ விளக்கத்தோடு
வருகிறார் பிரான்சு பேராசிரியர்.பெஞ்சமின் லெபோ அவர்கள்!

ஆல்பர்ட்.

>>>>பாரதிதாசனைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
*****************************************************
புதுச்சேரியில் தோன்றிய புயலை சிலர் மென்காற்று, வறண்ட மேகம்
என்று பாரதியை உயர்த்தியும், தாசனை இகழ்ந்தும், தாசன் உலக
கவிஞரே இல்லை என்ற மாயையைத் தோற்றுவித்தனர்.>>>>>

அன்புடன்,
அன்பு.
********************************************************
பாவேந்தரின் பகுத்தறிவுப் பெண்.
******************************
Wed, Apr 23, 2008 at 2:49 AM
புரட்சிக் கவிஞரின் பெண் மூடப் பழக்க வழங்கங்களை ஏற்காதவள். ஒரு பெண்ணுக்கான உரிமையை மற்றவர்கள் தரும் வரையில் அவள் காத்திருப்பதில்லை என்பதற்கு ஒரு இனிய காட்சி...

சோலை வனத்தில் அழகு மங்கை அவள் காத்திருக்கின்றாள். செல்வப் பிள்ளை ஒருவன் அவளை விழியால் பருகி, அருகில் வந்து உன் கொவ்விதழ் கொண்டு கன்னத்தில் முத்தம் ஒன்று தா என்கிறான்.. அதற்கு அவளோ படித்திருக்கின்றீரா? என்றாள். நான் பல கலை கற்ற பண்டிதன் என்றான். அப்படியானல் பெண்ணுக்கு உரிமை உண்டா சொல்க? என்றாள். "கொடுப்பது தானே அறம்" என்றான். நானே எடுத்துக் கொண்டால் என்ன? என்று கேட்டு அவனை மடக்கினாள் அவள். அதோடு விட்டானா அவனை, இல்லை இல்லை, அவன் நெருங்க முற்பட்ட போது தன் இடை வாளினை உருவி ஓடிப்போ என்று விரலால் குறிப்பு காட்டினாள்.

"செல்வப் பிள்ளாய்! இன்று புவியில் பெண்கள்
சிறுநிலையில் இருக்க வில்லை ! விழித்துக் கொண்டார் !"

என்று கூறிக் கவிஞர் மதிக்கிறார். இப்படிப்பட்ட பெண் பிறந்த போது அவளைத் தாலாட்டும் கவிஞர் மொழி கேளுங்கள்..

"மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற
காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே !"

கற்பூரம் வைத்திருந்த பெட்டியைத் திறந்தவுடன் காடு முழுவதும் மணப்பது போல் இந்தச் சமுதாயம் முழுவதும் அவள் புகழ் பரப்பக் பிறந்திருக்கின்றாள்....






<>பாரதிதாசன் யார்?<>
*************************
Thu, Apr 24, 2008 at 4:36 AM
பாரதிதாசனார் 29.04.1891 இல் புதுவையில் பிறந்தார்.
இவர் பெற்றோர் கனகசபை, இலக்குமி
அம்மாள். பாரதியார் புதுவையில் வாழ்ந்த
போது அவர் மீது கொண்ட அன்பு காரணமாகத்
தம் பெயரைப் பாரதிதாசன் எனப் புனைந்து
கொண்டார்.

"தேனொக்கும் செந்தமிழே! நீ கனிநான்
கிளிவேறென்ன வேண்டும் இனி?
என்ற தமிழுணர்வும்...
"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"
என்ற இனவுணர்வும்...
"உறுதி உறுதி ஒன்றே சமூகம்என்று
எண்ணார்க்கு இறுதி, இறுதி...
என்ற சமுதாய உணர்வும் கொண்டு
வாழ்ந்தவர் பாவேந்தர்..

இவர் குடும்ப விளக்கு, இருண்ட வீடு,
தமிழியக்கம், பாண்டியன் பரிசு, இசையமுது,
அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம்,
பிசிராந்தையார் நாடக நூல் என தொண்ணூறுக்கும்
மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்..

நாடு, மொழி, இனம், சமுதாயச் சீர்திருத்தம்
இயற்கை முதலானவற்றைப் பாடு பொருளாக
கொண்டு இவர் இயற்றிய நூல்கள் இறவா
இன்பக் களஞ்சியங்கள்.

செந்தமிழைச் செழுந் தமிழாகக் காண
மிக்க ஆவல் கொண்டு இருந்தார்.
என்னருந்தமிழ் நாட்டின் கண் எல்லாருங்
கல்வி கற்க வேண்டும்என விழைந்தார்..

"எல்லாருக்கும் எல்லாம் என்று இருப்பதான
இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்
கல்லாரை காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்கு மரம் அங்கே உண்டாம்".
என எச்சரித்தார்.
"எளிமையினால் ஒரு தமிழன்படிப்பில்லை
என்றால் இங்குள்ள எல்லாரும்நாணிடவும்
வேண்டும்"
என்று பாடி கல்வி கற்க வேண்டிய
அவசியத்தை உணர்த்துகிறார்பாவேந்தர் பாரதிதாசன்..
அன்புடன்,
அன்பு.

பெண் என்பவள் சுதந்திரப் பறவையாக வாழ வேண்டும். பல கட்டுப் பாடுகளிலிருந்து பெண் விடுவிக்கப் பட வேண்டும் என்று விரும்பினார் பாவேந்தர். அவற்றில் மூன்றுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்து பாடுபட்டார். அவை
1. கைம்மைக் கொடுமை2. வழி வழி வந்த அச்சம்3. பழைய கண்மூடி வழக்கங்கள்
பாவேந்தருக்கு முன்பு இருந்த கவிஞர்கள் எல்லாம் பெண்களை அழகுப் பதுமைகளாகவே வர்ணித்து வந்தனர். அவளின் கைம்மைக் கோலம் கண்டு கண்ணீர் வடித்தனர். விதியின் செயலை கவிதைகளால் கண்டித்தனரே தவிர அவளின் கைம்மைக் கோலம் மாற வழி காணவில்லை. பெண் என்பவள் அச்சப்படும் போதும் அழகாயிருப்பதாக கவிதை புனைந்தனர். பழைய வழக்கங்களை விடாமல் பின் பற்றுவதில்தான் பெண்மையின் சிறப்பு இருக்கிறது என்றனர். பாவேந்தர் இந்த வேலிகளைக் உடைந்தெறிந்து பெண்ணின் உரிமை போரட்டத்திற்கு அகலச் சாலை அமைத்தார்.
கணவன் இறந்த பின் பெண் என்பவள் கூந்தலில் மலர் சூடக் கூடாது. நெற்றியில் திலகம் இடக் கூடாது. தெருவில் இறங்கும் போது நாலு பக்கம் பார்த்து விட்டு இறங்க வேண்டும். செயல் கருதி புறப்பட்டவர் பார்வையில் பட்டு விட்டால் செயல் தடை பட்டு போகும் என்று கருதினர். இவை மட்டுமா..
"தறையிற் படுத்தல் வேண்டும்சாதம் குறைத்தல் வேண்டும்"
இப்படி எல்லாம் வாழப் பணித்தது பழமை உலகம். கணவனை இழந்தப் பெண் காதலிக்கலாம்.மறு மணம் செய்து கொள்ளலாம் என்று சீர் திருத்தப் பாதை காட்டினார் பாவேந்தர்.
கணவனை இழந்த இளம் பெண் ஒருத்தி காதலிக்கிறாள். முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞனும் காதலிக்கிறான். இரு மணம் இணைந்த பின்னும், மறு மணம் செய்து கொள்ள சமூகம் ஒப்புக் கொள்ள வில்லை.இந்த வேதனையை பாரதிதாசன் குரலில்.
" இன்பவருக்கம் எல்லாம் நிறைவாகிஇருக்கின்ற பெண்கள் நிலை இங்குஇவ்விதமாய் இருக்குதண்ணே ! இதில்யாருக்கும் வெட்கமில்லை !
காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே - கெட்டகைம்மையைத் தூர்க்காதீர் - ஒருகட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச்சாத்திரம் பார்க்காதீர்."
வைதிக நெறி கடுமையான கட்டுப்பாட்டைக் கைம்பெண்களுக்கு விதித்திருந்தது. மனைவி இறந்து விட்டால் கணவன் மறு மணம் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்ணுக்கு அந்த உரிமை இல்லை..
"வையக மீதினில் தாலி இழந்தவள்மையல் அடைவது கூடுமோ ?துய்ய மணாளன் இறந்த பின் மற்றவன்தொட்டதை வைதிகம் ஏற்குமோ ?
என்று பகுத்தறிவற்ற நிலையில் கேட்டுக் கொண்டிருந்தனர் பழைமைப் பிடியில் சிக்கித் தவித்தவர்கள். இந்தியா முழுவ்ழ்திலும் கைம்பெண்களின் வாழ்க்கை துன்பமிக்கதாக இருந்த நேரத்தில் புரட்சி செய்தோர் எதிர்த்தனர் அதில் பாவேந்தர் குரல் வன்மையாக ஒலித்தது.
" மண்படைப்பே காதலெனில் காதலுக்குமறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்கு"
இன்று மறுமணம் தடையின்றி நிகழ்கிறது. வரலாறு திசை மாறியிருக்கிறது. எல்லாம் அன்று பாவேந்தரின் கனல் கக்கும் கவிதைகளால் தான்....
அன்புடன்,
அன்பு.
**********************
பாவேந்தர் வாரம் - 15

*************************
பாவேந்தரின் பட்டணம்
எத்தனை வகைத் தெருக்கள்! என்னென்ன வகை இல்லங்கள்! ஒத்திடும் சுண்ண வேலை உயர் மரவேலை செய்யும் அத்திறம் வேறே; மற்றும் அவரவர்க் கமைந்த தான கைத்திறம் வேறே என்று காட்டின கட்டிடங்கள்.
இயற்கையின் உயிர்கட்குள்ளே மனிதன்தான் எவற்றினுக்கும் உயர்ச்சியும், தான் அறிந்த உண்மையை உலகுக் காக்கும் முயற்சியும், இடைவிடாமல் முன்னேற்றச் செயலைச் செய்யும் பயிற்சியும் உடையான் என்று பட்டணம் எடுத்துக் காட்டும்.
நடுவினிற் புகையின் வண்டி ஓடிடும் நடைப் பாதைக்குள் இடைவிடா தோடும் 'தம்மில் இயங்கிடும் ஊர்தி' யெல்லாம் கடலோரம் கப்பல் வந்து கணக்கற்ற பொருள் குவிக்கும் படைமக்கள் சிட்டுப் போலப் பறப்பார்கள் பயனை நாடி!
வாணிகப் பண்ட சாலை வைத்துள்ள பொருள்கள் தாமும், காண் எனக் காட்டி விற்கும் அங்காடிப் பொருள்கள் தாமும், வீணாளைப் பயன் படுத்தும் வியன்காட்சிப் பொருள்கள் தாமும், காணுங்கால் மனிதர் பெற்ற கலைத்திறம் காணச் செய்யும்.
உள்ளத்தால் ஏட்டால் தீட்டி உலகத்தில் புதுமை சேர்க்கும் கொள்கைசேர் நிலைய மெல்லாம் அறிஞரின் கூட்டம் கண்டேன்; கொள்கைஒன் றிருக்க வேறு கொள்கைக்கே அடிமையாகும் வெள்ளுடை எழுத்தா ளர்கள் வெறுப்புறும் செயலும் கண்டேன்.
உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பும் உயர்வழக் கறிஞர் தம்மை விண்வரை வளர்ந்த நீதி மன்றத்தில் விளங்கக் கண்டேன்; புண்பட்ட பெருமக் கட்குப் பொதுநலம் தேடு கின்ற திண்மைசேர் மன்றிற் சென்றேன் அவரையே அங்கும் கண்டேன்.
மாலைப்போ தென்னும் அன்னை, உழைப்பினால் மடிவார் தம்மைச் சாலிலே சாரா யத்தால் தாலாட்டும் கடையின் உள்ளே காலத்தைக் களியாற் போக்கக் கருதுவோர் இருக்கக் கண்டேன், மாலையில் கோழி முட்டை மரக்கறி ஆதல் கண்டேன்.
இயற்கையின் எழிலை யெல்லாம் சிற்றூரில் காண ஏலும்! செயற்கையின் அழகை யெல்லாம் பட்டணம் தெரியக் காட்டும்! முயற்சியும் முழுது ழைப்பும் சிற்றூரில் காணுகின் றேன்; பயிற்சியும் கலையுணர்வும் பட்டணத் திற்பார்க் கின்றேன்!
வருநாளில் நாடு காக்க வாழ்ந்திடும் இளைஞர் கூட்டம், திருநாளின் கூட்ட மாகத் தெருஓரம் சுவடி யோடு, பெருநாளைப் பயன்நா ளாக்கும் பெரும்பெருங் கழகம் நோக்கி ஒருநாளும் தவறிடாமல் வரிசையாய் உவக்கச் செல்வார்!
கலையினில் வளர்ந்தும், நாட்டுக் கவிதையில் ஒளிமி குந்தும், நிலவிடும் நிலா முகத்து நீலப்பூ விழி மங்கைமார் தலையாய கலைகள் ஆய்ந்து தம்வீடு போதல் கண்டேன் உலவிடு மடமைப் பேயின் உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!
அன்புடன்,
அன்பு.
**********************
பாவேந்தர் வாரம்-16
********************************
பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்- ஈரோடு தமிழன்பன் நூலிலிருந்து...
"ஏம்பா சுத்த இவனா இருக்கிறே..."
பாரதிதாசன், தான் இளம் பருவத்தில் ஒரு `வஸ்தாதாக' இருந்தாக அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். அந்த நாள்களில் புதுச்சேரியில் கொட்டடி நாயக்கர், வல்லூறு நாயக்கர் என்று அழைக்கப்பெற்ற வேணு நாயக்கரின் உடற்பயிற்சிப் பள்ளியில் பாரதிதாசன் பயிற்சி பெற்றார். மற்போர், சிலம்பம் ஆகியவற்றில் தேர்ச்சி கண்டார். அவ்வேணு நாயக்கர் அப்போது புதுவையில் தங்கியிருந்த பாரதியாருக்கு நெருங்கிய நண்பர். இப்பின்னணியில் பார்த்தால், அறுபத்தெட்டாம் வயதில், `சும்மா ஏன் யானை முன்னால் போகிறது' என்று கேட்டுத் தாமே அதன் மீது உட்கார்ந்து வலம் வர விரும்பியிருப்பார் என்பதை ஏற்பதில் எவ்விதத் தடையும் இருக்காது என்றே எண்ணுகிறேன்...
இன்னும் ஒன்று - அவருள்ளத்திலிருந்து அவர் உடலிலும் பரவி வெளிப்பட எப்போதும்...
சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், தமிழ்ப் போர் மறவர்களும் காத்துத் துடித்துக் கொண்டிருந்தனர்.

********************
பாவேந்தர் வாரம்-17****************************
மனிதனுள் சாதி வேறுபாடு ஏதும் இல்லை. இறைவன் என்பவன் ஒருவனே, அவனே எல்லோருக்கும் பொதுவானவன், என்ற பாவேந்தரின் கனவு இன்னும் கனவாகவே இருக்கிறது.
ஆலய உரிமை
எவ்வுயிரும் பரன் சந்ததி யாமென்றிசைந்திடும் சாத்திரங்கள் - எனில்அவ்விதம் நோக்க அவிந்தனவோ நம்அழகிய நேத்திரங்கள்?
திவ்விய அன்பிற் செகத்தையெல்லாம் ஒன்றுசேர்த்திடலாகும் அன்றோ? - எனில்அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில்அத்தனை பேரும் ஒன்றே?
ஏக பரம்பொருள் என்பதை நோக்கஎல்லாரும்உடன் பிறப்பே - ஒருபாகத்தார் தீண்டப்படாதவர் என்பதிலேஉள்ளதோ சிறப்பே?
"தேகம்சுமை நமைச் சேர்ந்ததில்லை" என்றுசெப்பிடும் தேசத்திலே - பெரும்போகம் சுமந்துடற் பேதம்கொண்டோம், மதிபோயிற்று நீசத்திலே.
என்னை அழைக்கின்ற கோயிலின் சாமிஎனக் கிழிவாய்த் தெரியும் - சாதிதன்னை விலக்கிடுமோ இதை யோசிப்பீர்சமூகநிலை புரியும்.
என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும்ஏழையர்க் கோர் கடவுள் - எளிதில்முன்னம் இரண்டையும் சேர்த்துருக் குங்கள்முளைக்கும் பொதுக் கடவுள்.
உயர்ந்தவர் கோயில் உயரந்ததென்பீர் மிகத்தாழ்ந்தது தாழ்ந்த தென்பீர் - இவைபெயர்ந்து விழுந்தபின் பேதமிலா ததைப்பேசிடுவீர் அன்பீர்.
உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமிஒளி மறைவில் தரத்தான் - மிகப்பயந்திழிந் தோர்களைக் கோயில் வராவண்ணம்பண்ணினதோ அறியேன்.
சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற்சூழ்வது பூசனையோ - ஒருசாதியை நீக்கினர், தலையையும் வாங்கிடச்சதியா லோசனையோ?
ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர்என்று மதித்ததுவோ - சாமிநீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல்நீரிற் குதித்ததுவோ?
மாலய மாக வணங்கிடச் சாமிவந்திடுவார் என்றீரே - அந்தஆலயம் செல்ல அநேகரை நீக்கிவழிமறித்தே நின்றீரே.
ஆலயம் செல்ல அருகரென்ற சிலர்அங்கம் சிறந்தாரோ? - சிலர்நாலினும் கீழென்று நாரி வயிற்றில் நலிந்து பிறந்தாரோ?
தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச்சாமி மலைப்பதுண்டோ? - இங்குவாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி வருத்தித் தொலைப்பதுண்டோ?
தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்சாமிக்குச் சத்தில்லையோ - எனில்வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிடமேலும் சமர்த்தில்லையோ?
தன்னை வணங்கத் தகாதவரை அந்தச்சாமி விழுங்கட்டுமே - அன்றிமுன்னை யிருந்த கல்லொடு கல்லாகிஉருவம் மழுங்கட்டுமே.
இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமிஇனத்தினில் பல்கோடி - மக்கள்தன்னை வணங்கத் தகாதென்று சொல்லிடிற்சாவதுவோ ஓடி?
குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டுமக்களிலே சிலர் மாத்திரம் அந்தவகையிலும் கூட்டிலையோ?
திக்கெட்டுமே ஒரு கோயிலன்றோ? அதில்சேரி அப்பால் இல்லையே - நாளும்பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர்நம்புவதோ சொல்லையே?
தாழ்ந்தவர் என்பவர் கும்பிடுதற்குத்தனிக் கோயில் கட்டுவதோ? - அவர்வாழ்ந்திடுதற்கும் தனித்தேசம் காட்டிப்பின்வம்பினை மூட்டுவதோ?
தாழ்த்தப் பட்டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச்சாற்றிடும் தேசமக்கள் - அவர்வாழ்த்தி அழைக்கும் "சுதந்திரம்" தன்னைமறித்திடும் நாசமக்கள்.
தாழ்ந்தவருக்கும் உயர்ந்தவருக்கும் அத்தாழ்நிலம் சொந்தம் அன்றோ?-இதில்சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்கே என்றுசொல்லிடும் நீதிநன்றோ?
"தாழ்ந்தவர்" என்றொரு சாதிப்பிரிவினைச்சாமி வகுத்ததுவோ? - எனில்வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்தவம்பு புகுத்தியதோ?
முப்பது கோடியார் பாரதத்தார் அவர்முற்றும் ஒரே சமூகம் - எனஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும்ஒப்பாவிடில் என்ன சுகம்?
இப்பெரு நாடும் இதன்பெருங் கூட்டமும்"யார்" என்று தற்புகழ்ச்சி - சொல்வர்இப்புறம் வந்ததும் கோயிலில் நம்இனத்தைச் செய்வார் இகழ்ச்சி.
மாடுண்பவன் திருக் கோயிலின் வாயிலில்வருவதற்கில்லை சாத்யம் - எனில்ஆடுண்ணுவோனுக்கு மாடுண்ணுவோன் அண்ணன்அவனே முதற் பாத்யம்.
நீடிய பக்தியில் லாதவர் கோயில்நெருங்குவதால் தொல்லையே! - எனில்கூடிஅக் கோயிலில் வேலை செய்வோருக்கும்கூறும்பக்தி இல்லையே.
"சுத்தமில்லாதவர் பஞ்சமர்!" கோயிற்சுவாமியைப் பூசிப்பரோ - எனில்நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பதுயாதுக்கு யோசிப்பீரே.
நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளிநேரில்அக் கோயிலிலே - கண்டும்ஒத்த பிறப்பின ரைமறுத் திருங்கள்கோயிலின் வாயிலிலே.
கூறும் "உயர்ந்தவர்" "தாழ்ந்தவர்" என்பவர்கோயிலில் செய்துவிட்டுப் - புவிகாறியு மிழ்ந்தது யாரமுகத்தே யில்லைகாட்டுவீர்ஒன்று பட்டு.
வீறும் உயர்ந்தவர் கோயில் புகுந்ததில்வெற்றிஇந் நாட்டில் உண்டோ - இனிக்கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில்தீதெனல் யாதுகொண்டோ?
அன்புடன்,
அன்பு
**************
பாவேந்தர் வாரம்-17

*******************************
பாரதிதாசனின் பொன்முடி (1949)
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த சேலம மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்
1949ல் உருவாக்கிய படம் "பொன்முடி'. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ஐம்பெருங் காப்பியங் களில் ஒன்றான "வளையாபதி'யை தழுவி அழகு தமிழில் எழுதிய கதை "எதிர்பாராத முத்தம்'. நாடகமாக நடிக்கப்பட்டு வெற்றிவலம் வந்த இந்தக்கதையை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், கதாநாயக னின் பெயரிலேயே "பொன்முடி' என திரைப்படமாக்கினார்.
பாரதிதாசன் வசனம், பாடல்களை எழுதினார். அமெரிக்கரான எல்லிஸ். ஆர். டங்கன் இயக்கினார். கதாநாயகனாக நரசிம்ம பாரதியும், கதாநாயகியாக மாதுரிதேவியும் நடித்தனர். ஆர். பாலசுப்பிரமணியன், எம்.ஜி.சக்கரபாணி, ஏழுமலை, காளி என். ரத்தினம், ஏ.கருணாநிதி ஆகியோரும் நடித்தனர். . பாரதிதாசனின் வசனத்தில் காதலும், பகுத்தறிவுக் கருத் துக்களும் படம் முழுவதும் இடம் பெற்றிருந்தன. காதல் காட்சிகள் அந்தக் காலக்கட்டத்திலேயே நெருக்க மாக இருந்ததாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தப் படம்.
கதாநாயகன் பொன்முடியை, மந்திரவாதி காளியிடம் மன்னிப்புக் கேட்குமாறு கூறும்போது, நாயகன் பேசும் வசனத்தில் பகுத்தறிவு நெடி தூக்கலாக இருக்கும். "
"உன் அகோர ஆட்டங்களை அடக்க வகையற்று மௌனம் சாதிக்கும் அந்த மாதாவிடம் மன்னிப்பா? தமிழன் சரித்திரத்திலேயே கூடாது. "
"மண் மேட்டுக்கு மாலை மரியாதை செய்வதா? பூனைக் குப் புலி பூஜை செய்வதா? சிங்கத்தை மறைந்திருந்து தாக்கிச் சிரித்து மகிழும் சிறுநாய்களே! அழுகிப்போன உங்கள் பிணங்களைக் கூட எங்கள் தமிழ்நாட்டுப் புழுக்கள் தீண்டாது. "
"பராசக்தியே, இந்த துரோகிகள் சுற்றிவிடும் பம்பரம்தானா நீ. ஏன் பேசாமல் இருக்கிறாய்?"
பாவேந்தரின் இந்த வசனம்தான் "பராசக்தி' யில் கலைஞர் கருணாநிதியின் வாளிப்பான வசனத்துக்கு அடிப்படை என்பார்கள் சிலர்.
அன்புடன்,


அன்பு.
*************************
பாரதிதாசன் வாரம்-19
பாரதியார்!
கணவர், மனைவிக்கிடையே சண்டை வந்தால் மனைவிதான் கோபித்துச் செல்வார். கணவன் கோபித்துச் செல்வது அரிது. ஒருமுறை பாரதியார் தனது மனைவியிடம் கோபித்துச் சென்றதை கேள்விப்பட்டார் பாரதிதாசன். பாரதியாருக்குக் கோபம் வந்து வெளியேறினால் எங்கிருப்பார் என்பதனை நன்கு அறிந்தவர் என்பதினால் புதுவை ரயில் நிலையத்திற்குச் சென்றார்.அங்கே பாரதியார் இருந்தார். ""சுப்புரத்தினம் எனக்கு மனம் சரியில்லை... நான் எங்காவது வெகுதூரம் போகணும். ரயிலில் டிக்கெட் எடுக்க பையிலே காசில்லே... ஒம் பையிலே எவ்வளவு பணம் வச்சிருக்கே?'' எனக் கேட்டார்.
""நீங்கள் எதிர்பார்க்கிற பணம் எங்கிட்டேயில்லை... சில்லறைக் காசுகள் தானிருக்கு...'' என்று கூறினார். மவுனமாக அப்படியும் இப்படியுமாக நடந்தார்.
அப்படி நடந்தால் பாரதியாருக்கு கோபம் தணியும் என்று தெரிந்து வைத்திருந்த பாரதிதாசன், ""வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்... நீங்கள் கோபமாய் வீட்டை விட்டு வெளியேறியதனால் மாமி மிகவும் தவித்துப் போய் இருக்காங்க...'' என்று கூறி பாரதியாரை சமாதானப்படுத்தி வீட்டிற்குப் புறப்பட்டனர்.பாரதிக்குப் பசி கிரக்கம் வீடு வரை நடக்க முடியுமா? முதலில் பசியைப் போக்க வேண்டும் என்ன செய்வது? வழியில் தெரிந்த வீட்டில் பாரதிதாசன் நீராகாரம் வாங்கித் தந்தார்.தெம்போடு அண்ணாந்து அதைச் சாப்பிட்ட பாரதி, ""அமுதமடா...'' என்றார்.எதையுமே பெரிதாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவர் பாரதி. ரிக்ஷாவில் ஏறினால் ரதம் என்பார்.மிருகக் காட்சியில் உள்ள சிங்கத்தைப் பார்த்தால், "ஏ சிங்க ராசா... கவிராசா... வந்திருக்கிறேன் என்னைப் பார்' என்பார்.இவ்விதம் பாரதி எதையும் பெரிதாக எண்ணும் எண்ணங் கொண்டதனால் வறுமை நிறைந்த வாழ்க்கையிலும் மனச் செழுமையுடன் வாழ்ந்து நல்லதையே பாடியவர் நித்தமும் பட்டினியால் வாட்டியெடுத்த நாட்டை "பாருக்குள்ளே நல்ல நாடு' என்று பாடினார். வீட்டை நல்ல வீடு என்று சொல்ல முடியவில்லை. வறுமை ஒன்றினை மட்டும் தன் குடும்பத்திற்கு வைத்திருந்தார்."இல்லாமை' என்ற நிலையில் அடிக்கடி குடும்பத்தில் பிணக்கு. பிணக்கினை மறைக்க மனப்போக்கு காட்டி வாழ்ந்து வந்தார். பெண்கள் மீது மட்டற்ற மதிப்பு வைத்து தெய்வமாக மதித்து வந்ததினால் கோபம் வரும் போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார் பாரதியார். அந்தக்காலத்து கவியரசர்கள் எல்லாம் எப்படி வறுமையில் மிகவும் வாடியிருக்கின்றனர் பார்த்தீர்களா?
அன்புடன்,
அன்பு.
********************பாவேந்தர் வாரம் -21*****************************
பாவேந்தரின் புரட்சி மனத்தை அவருடைய படைப்புகளிலிருந்து காணலாம். பல்வேறு படைப்புகளில் வெளிப்படும் அவரின் பெண் பாத்திரங்கள்..
வஞ்சி - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்அமுத வல்லி - புரட்சிக் கவிவிஜயா - வீரத்தாய்தங்கம் - குடும்ப விளக்குநகைமுத்து - குடும்ப விளக்குகிள்ளை - காதலா, கடமையாசுப்பம்மா - தமிழச்சியின் கத்திஅன்னம் - பாண்டியன் பரிசுபூங்கோதை - எதிர்பாராத முத்தம்
இப் படைப்புகள் தேவை ஏற்படும் போது கடும்புயலாக உருக் கொள்கின்றனர். மற்ற சமயங்களில் குளிர் தென்றலாய் இதம் செய்கின்றனர். பெண்மையின் பன்முக ஆற்றலை இப்பாத்திர படைப்புகள் காட்டுகின்றன.
அன்புடன்,அன்புபாவேந்தர் வாரம் -22***********************குழந்தைப் பருவதில் கற்கும் கல்வி, பசுமரத்தாணி போன்றது என்பர் சான்றோர். பாவேந்தர் பாரதிதானும் குழந்தைப் பருவத்திலேயே மொழி உணர்வு வேண்டும், இன உணர்வு வேண்டும் என்று கருதினார்.
" இளஞ்சேரனை நீ யார் என்று கேட்டுப்பதிலை எதிர்பார்த்திருந்தார். அவனோதன் மார்பு காட்டி " நான் தம்பி" என்றான்.
'தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி" என்றேஇயம்பி அமிழ்து வந்தாள்.
இளஞ்சேரன் கைக்குழந்தை. இளஞ்சேரனின் தமக்கை அமிழ்து ஆறு வயது. இந்த வயதில் எப்படி மொழி உணர்வு வந்தது. பெற்றோர் கொண்ட உணர்வு வழிவழியாய் வருதலையே கவிஞர் இங்கனம் காட்டுகிகிறார்.
குழந்தையை வளர்க்கும் நெறி பற்றியும் பாரதிதாசன் கூறுகிறார். " ஆல் ஒடிந்து விழுந்தாலும் தோள்கள் தாங்கும்" வலிமை பிள்ளைகளுக்கு வேண்டும் என்கிறார்.
" இன்னம் தூக்கமா - பாப்பாஇன்னம் தூக்கமா?பொன்னைப் போல வெயிலும் வந்ததுபூத்த பூவும் நிறம் குறைந்ததுஉன்னால் தோசை ஆறிப் போனதேஒழுங்கெல்லாமே மாறிப் போனதே"
என்று நல்ல நெறிகளை குழந்தைகளுக்கு உணர்த்தும் பாடல்களை பல புனைந்தார்.
" இன்று குழந்தைகள் நீங்கள் எனினும்இனி இந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்குன்றினைப் போல் உடல் வன்மை வேண்டும்கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்"
என்று குழந்தை மனத்திலேயே தீமையை எதிர்த்துப் போராடும் விதையை விதைத்து விடுகிறார்.
அன்புடன்,அன்பு.பாவேந்தர் வாரம் -23******************************
பாரதிதாசனும் புதுமைப்பித்தனும்தி.க.சி.
பாரதிதாசனைப் பற்றிய புதுமைப்பித்தனின் மதிப்பீட்டை எனக்குத் தெரிந்த அளவிற்குக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாரதிதாசன் 29.04.1891ல் பிறந்து 21.04.1964ல் மறைந்தார். 73 ஆண்டுகள் பாரதிதாசன் வாழ்ந்துள்ளார். புதுமைப்பித்தன் 1906ல் பிறந்து 1948ல் மறைந்தார். புதுமைப்பித்தன் வாழ்ந்தது 42 ஆண்டுகள். பாரதிதாசன், புதுமைப்பித்தனைவிட 15 ஆண்டுகள் மூத்தவர் எனினும் இவர்கள் இருவரும் சமகாலத்தவர்கள். நெருங்கிய நண்பர்கள்.
1931க்குப் பின்பு நடத்திய மணிக்கொடியில் பாரதிதாசனும் பற்பல சிறந்த கவிதைகளைப் படைத்துள்ளார்.
மணிக்கொடியில் வந்த பாரதிதாசன் கவிதைகளை பாரதியின் பிரதான சீடர்களில் ஒருவராகவும், பின்னாளில், சக்தி, மஞ்சரி முதலிய பத்திரிக்கைகளின் ஆசிரியராக இருந்த தி.ஜ.ர.வும், பேராசிரியர் கே. சுவாமிநாதனும் மற்றும் பலரும் மிக உயர்வாக மதித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போலவே மணிக்கொடி எழுத்தாளரான புதுமைப்பித்தனும், பாரதிதாசனை கவிதா ரீதியிலும், கருத்து ரீதியிலும் பாரதியாருக்குப் பின் வந்த கவிஞர்களில் தலைசிறந்தவராகக் கருதினார். ஏனெனில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பாரதியின் உயிர்நாடியான கொள்கைக்கு தமது வாழ்நாள் முழுவதும் பாரதிதாசன் விஸ்வாசமாய் இருந்தார் என்பதைப் புதுமைப்பித்தன் நன்கு உணர்ந்திருந்தார்.
பாரதிதாசனை ஒரு புதுமைக் கவி என்றும், புரட்சிக் கவி என்றும், புதுமைப்பித்தன் கருதினார். பாரதிதாசனின் பாண்டியன் பரிசு என்ற நூலுக்குப் புதுமைப்பித்தன் எழுதிய மதிப்புரையே இதற்குச் சான்றாகும்.
“தமிழர்களுக்கு பாரதியார் விட்டுச்சென்ற செல்வங்களில் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், இவற்றைத் தவிர பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினமும் ஒருவர்” என்று அழுத்தம் திருத்தமாக புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தை இன்றைய தமிழ் இலக்கியப் படைப்பாளர்களும், ஆய்வாளர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். இது புதுமைப்பித்தனுக்கோ பாரதிதாசனுக்கோ நியாயம் செய்வதாகாது.
40களில் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் முல்லை முத்தையா நடத்தி வந்த முல்லை என்னும் மாத இதழ் அலுவலகத்தில் பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுண்டு. இருவரும் மிக நெருங்கிய தோழர்களாக விளங்கினர் என்பதையும் முல்லை இதழின் ஆசிரியராக இருந்த தொ.மு.சி ரகுநாதன் பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.
29.07.1946ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் அறிஞர் அண்ணா முயற்சியால் பாவேந்தர் பாரதிதாசனாருக்கு, நிதி திரட்டப்பட்டு, ரூ. 25,000 பொற்கிழி வழங்கப்பட்டது. இந்த நிதி திரட்டும் குழுவில் புதுமைப்பித்தனும் ஒரு உறுப்பினராக இருந்தார் என்பதும், புதுமைப்பித்தனும் தன் பங்காக ரூ.100/- அன்பளிப்பு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்று புதுமைப்பித்தன் எந்தப் பத்திரிக்கையிலும் வேலை பார்க்கவில்லை. மிகுந்த பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்தார். அந்த நிலையிலும் புதுமைப்பித்தன் ரூ. 100/- அன்பளிப்பு செய்துள்ளார் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.
பாரதிதாசனும், தன்மானம், பகுத்தறிவு, சமதர்மம், சமூக நீதி, இவற்றுக்காகக் கொள்கை உறுதியுடன் போராடிய ஒரு பேனா வீரர் என்பது புதுமைப்பித்தனின் மதிப்பீடாகும். அப்பொழுது பாரதிதாசன், திராவிட இயக்கக் கொள்கையின் பிரதான போர் முரசாக இருந்தார் என்பது புதுமைப்பித்தனுக்குத் தெரியும் என்றாலும், அரசியல் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ் வளர்ச்சிக்கு பாரதிக்குப் பின்னால், மிகச்சிறந்த பங்காற்றிய கவிஞர் பாரதிதாசன் என்பதே புதுமைப்பித்தனின் உள்ளக்கிடக்கையாகும். எனவேதான் பாரதிதாசன் மீது மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்.
இருவருமே, புதிய பாதையில் புரட்சிகர உணர்வுடன் தமிழ் இலக்கியத்தைச் செழிக்கச் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கம் கொண்டவர்கள்.
பாரதியாருக்கும், பாரதிதாசனுக்கும் இடையே உள்ள முக்கியமான கொள்கை வித்தியாசம் என்னவென்றால், பாரதி ஆத்திகர், பாரதிதாசன் நாத்திகர். பாரதியின் மறைவுக்குப் பிறகு, பாரதிதாசன் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து, பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும், ஒரு நாத்திகராக மாறியபொழுதிலும், தமது இறுதி மூச்சு உள்ள வரையில், பாரதியாரைத் தமது குருநாதராகவே பாரதிதாசன் கொண்டாடினார் என்பது மனங்கொள்ளத்தக்கது. தமது குருநாதர் பாரதியாரை யாராவது இழிவாகப் பேசினால், பாரதிதாசன் இம்மியளவும் பொறுத்துக்கொள்ள மாட்டார். எப்போதும் பாரதியின் லட்சியங்களைப் பரப்பும் தொண்டனாகவே பாரதிதாசன் தம்மைக் கருதினார்.
புதுமைப்பித்தனைப் பொறுத்த வரையில் அவர் ஆத்திகரா? நாத்திகரா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் பண்டித ஜவஹர்லால் நேருவைப் போல ஒரு நிரீஸ்வரவாதியாகவே வாழ்ந்தார் எனலாம்.
காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற புதுமைப்பித்தனின் கதைகளே அதற்குச் சான்றாகும். பாரதிதாசன் பழுத்த நாத்திகராக இருந்தார். எனினும் இருவரும் பரஸ்பர அன்பும், மதிப்பும் கொண்டிருந்தனர்.
ஆனால், புதுமைப்பித்தன் பாதையில் நவீன இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்கிற எழுத்தாளர்கள், பாரதிதாசனைப் புறக்கணிப்பதையே தம்முடைய இலக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளனர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களையும் கண்மூடித்தனமாக வெறுத்து ஒதுக்குகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் பாரதிதாசனை மட்டும் அன்றி, புதுமைப்பித்தனையும் அவமதிக்கின்றனர் என்பதே என் கருத்தாகும்.
பாரதியும், பாரதிதாசனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் பெரும்பாலும் கருத்தொற்றுமை கொண்டவர்கள். பாரதிதாசன் கவிதைத் துறையிலும், புதுமைப்பித்தன் சிறுகதைத் துறையிலும் மாபெரும் சாதனையாளர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இனவெறியும், ஜாதி வெறியும், மதவெறியும் தலைவிரித்தாடும் இன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் பற்றும் சமநீதி உணர்வும் மங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் மனித நேயத்தையும், மனித குல விடுதலையையும், ஒற்றுமையையும் உயர்த்திப் பிடித்த பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான கலங்கரை விளக்குகள் ஆவர்.
தமிழில் நவீனத்துவம் என்றும் புதுமைப்பித்தன் பாதையில் தமிழ் இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்றும் கூறிக்கொள்ளும் படைப்பாளிகளும், வேட்பாளர்களும், பாரதியில் இருந்து பாரதிதாசனைப் பிரித்துப் பார்ப்பதும், பாரதிதாசனில் இருந்து புதுமைப்பித்தனை பிரித்துப் பார்ப்பதும் போகாத ஊருக்கு வழி சொல்வதாகும் என்பதை உணர வேண்டும்.
அன்புடன்,
அன்புபாவேந்தர் வாரம் -24**********************
சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் " கண்ணகி புரட்சிக் காப்பியம்" எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்தார். இயற்கை மீறிய நிகழ்ச்சிகளை அவர் நீக்கி விடுகிறார். கணவனைப் பெற வேண்டுமானல், கண்ணகி சோம குண்டம், சூரிய குண்டம் என்ற குளங்களில் மூழ்கி மன்மதனைத் தொழ வேண்டும் என்று தேவந்தி என்ற தோழி கூறுகிறாள். சிலப்பதிகார கண்ணகி அது சிறப்பாகது என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். ஆனால் பாவேந்தர் கண்ட கண்ணகியோ " உன் தீய ஒழுக்கத்தை, இங்கு நுழைக்காதே" என்று எச்சரிக்கிறாள். மதுரையைக் கண்ணகி தன் ஆற்றலால் எரித்தாள் என்று சிலப்பதிகாரம் சொல்வதை, கண்ணகிக்கு நேர்ந்த கொடுமை கண்டு மக்கள் மதுரை நகர்க்குத் தீயிட்டனர் என்று மாற்றினார் பாவேந்தர். கண்ணகி வானநாடு போனதாகக் கூறப்பட்டதை மாற்றி, மலையில் இருந்து விழுந்து இறந்தாள் என்று கூறினார். கண்ணகி காவியம் கவிஞர் படைப்பில் சீர்திருத்தக் காவியமாயிற்று.
அன்புடன்,அன்பு.பாவேந்தர் வாரம் -25***********************ஆண், பெண் என்ற பாகுபாடு இயற்கையில் அமைந்தது. இரு வேறு பாலினம் ஒன்றுவதில் தான் உலக இயக்கம் இருக்கிறது. பல சமூக அமைப்புக்களில் ஆண் ஆதிக்கம் மிக்கவனாகவும், பெண் அவனுக்கு அடங்கி வாழ்பவளாகவும் இருக்கும் நிலை உள்ளது. திருமணத்திற்கு முன்பும், பின்பும், அளவற்ற கட்டுப்பாட்டுக்குள் வாழ வேண்டிய சுழல் பெண்களுக்கு உள்ளது. இந்நிலை மாற அவ்வப்போது சீர்திருத்தவாதிகள் தோன்றிப் பெண்ணுலகு உரிமை பெற குரல் கொடுத்தனர்.
தமிழ்ச் சமுதாயத்தில் பாவேந்தர் பெண்களின் விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டார்.
தம் படைப்புகள் அனைத்திலும் புரட்சி உள்ளமும், செயல் திறனும் கொண்ட பெண்களைப் படைத்தார்.
"இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் என்கின்றீரா ? அப்படியானால் முதலில் பெண்ணுக்கு விடுதலை கொடுங்கள்" என்றார்
"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டுமண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே"
என்று பேசிய முதல் கவிஞர் அவரே.
எங்கெங்கு பெண்களின் விடுதலை இயக்கமும், உரிமைப் போரும் நடக்கின்றனவோ அங்கெல்லாம் பாவேந்தரின் பாடல்கள் முழங்கும். அவருடைய பாத்திர படைப்புகளே பேசும் என்பது திண்ணம்..
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீஇன்பம் சேர்க்க மாட்டாயா ? - எமக்குஇன்பம் சேர்க்க மாட்டாயா ?.
அன்புடன்,
அன்பு.

No comments: