Monday, April 21, 2008

<>>"பாவேந்தர் கவிதை உலகில்-புதியமாதவி<>

பாரதிதாசன் - பாரதி சந்திப்பு
--------------------------------------


பாரதியைத் தமது கொட்டடி
வாத்தியார் வேணு நாய்க்கர்
மணவிழாவில் சந்தித்தாகபாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பு 1908லேயே நேர்ந்துவிட்டதாக
பாரதிதாசன் ஆர்வலர்கள்சொல்கிறார்கள்.
மன்னர்மன்னன், ச்.சு.இளங்கோ போன்றோர்
இக்கருத்தை ஏற்கின்றனர்..
பாரதி-பாரதிதாசன் உறவைச் சுட்டும் 'பாரதியோடு பத்தாண்டுகள்' என்ற தொடர் பாரதியின் புதுவை வாழ்க்கையினையே (1908-1918) கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது..இரா.இளவரசு பிற சுழ்நிலைச் செய்திகளைக் கொண்டு 1910ல் இச்சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம்எனத் துணிந்துள்ளார்.இப்பெரும் கவிஞர்களின் சந்திப்பைப் பற்றி பாரதி ஆய்வாளர்கள் அதிகம் பொருட்படுத்தியதாகத்தெரியவில்லை. பாரதி ரமணரைச் சந்தித்தாரா இல்லையா என்பது போன்ற முதன்மையற்றசெய்திகளே அவர்களை ஆட்கொண்டுள்ளன. பாரதி பாரதிதாசனைச் சந்தித்ததை சுதேசமித்ரனில் தராசு என்ற தலைப்பில் எழுதிய தொடர்கட்டுரையில் குறிப்பிடுகிறார். தராசு கட்டுரை: பாரதி----------------------- "எழுக! நீ புலவன்! " இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார். கைக்கோள ஜாதி. ஒட்டக்கூத்தப் புலவர் கூடஅந்தக் குலந்தானென்று நினைக்கிறேன். இவருக்கு இங்கிலிஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார்.ஆதலால் வெளிப்படுத்தவில்லை. தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது."இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு ஸந்தோஷம். எப்போதும்வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?" என்றது. "கவிராயரே,எ ன்ன விஷயம் கேட்கவந்தீர்?" என்று தராசு கேட்டது. "எனக்கு கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை.அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன்." என்று கவிராயர் சொன்னார். "இதுவரை பாடினபாட்டுண்டானால் சொல்லும்" என்று தராசு கேட்டது. "இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம்.அது அத்தனை ரஸமில்லை" என்று சொல்லிக் கவிராயர் விழித்தார். "மாதிரி சொல்லும்" என்றது தராசு. புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை. " காளை யொருவன் கவிச்சுவையைக் -கரைகாண நினைத்த முழு நினைப்பில் -அம்மைதோளசைத் தங்கு நடம் புரிவாள்_ இவன்தொல்லறிவாளர் திறம் பெறுவான்.ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா!-தம்பிஏழு கடலவள் மேனியடா!தங்கும் வெளியினிற் கோடியண்டம்- எங்கள்தாயின் கைப் பந்தென வோடுமடா!கங்குலில் ஏழு முகிலினமும் வந்துகர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ?மங்கை நகைத்த ஒலியதுவாம்-அவள்வாயிற் குறுநகை மின்னலடா!" தராசு கேட்டது: "புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?" கவிராயர்: "இன்னும் படிக்கவில்லை, இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்" தராசு" சரிதான், ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்கதியும் அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்". இங்ஙனம் வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில் சீட்டிக் கடை ஸேட் வந்தார். கவிராயர் தராசை நோக்கி, "நம்முடைய ஸமாஷணைக்கு நடுவிலே கொஞ்சம்இடையூறுண்டாயிற்று" என்றார். தராசு சொல்லுகிறது: "உமக்கும் அதுதான் காணும் வார்த்தை, நெசவிலே நாட்டு நெசவுமேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல், பணம் நல்லது,ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டுநெய்ய வேண்டும் அல்லது உறுதியான உழவனுக்கு வேண்டிய கச்சை வேஷ்டி போலேநெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது.மஸ்லில் நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை,தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேல் நல்லவர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்". அப்போது புலவர் தராசை நோக்கி, "நீயே எனது குரு" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார். தராசு : "எழுக ! நீ புலவன் !" என்றது. ------------- பாரதியைப் பற்றிப் பல பாடல்களையும் கட்டுரைகளையும் பொழிவுகளையும் இயற்றியபாரதிதாசன் தராசுவில் இடம் பெற்ற நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன் என்பதுபுலப்படவில்லை.பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதற்காகப் பாரதிதாசன் எழுதிய திரைக்கதையிலும்நாடகத் தன்மையுடன் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற இந்நிகழ்ச்சி இடம் பெறாதது ஏன் என்பதும்தெரியவில்லை. பாரதிதாசன் ஒரு பெரும் கவிஞராக மலரவிருக்கிறார் என்பதைப் பாரதிமுன்னுணர்ந்ததாகக் கொள்ள தராசு இடம் தரவில்லை. (நன்றி : காலச்சுவடு டிசம்பர் 2006 பாரதி 125 ஆ. இர.வேங்கடாசலபதி எழுதியபாரதியின் தராசு அல்லது பாரதி- பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்தது எப்போது?கட்டுரையிலிருந்து ) பாரதிதாசன் விழா குறிப்பில் இப்பதிவு இடம் பெறுவது சிறப்பாக இருக்கும் என்பதால்அப்படியே பாரதிதாசன் சம்பந்தப்பட்ட வரிகளை மறுவாசிப்புக்காக.. அன்புடன், புதியமாதவி,மும்பை.


"பாவேந்தர் கவிதை உலகில்..."

பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலும்சரி, அவருக்குப் பின்
இன்றுவரைஅவர் கருத்துகளை விரும்பியவர்கள்/ஏற்றுக்
கொண்டவர்களையும் தாண்டிஅவர் கருத்துகளை ஏற்றுக்
கொள்ளாதவர்களையும்பாதித்தது. அவருக்குப் பின் வந்த
கவிதைகளில்அவர் கவிதைகளின் தாக்கம் என்றுஓர் ஆய்வு
(முனைவர் பட்டத்திற்கு அல்ல!)செய்யப்பட வேண்டும்.

ஓரங்கநாடகம்: காதல் காட்சி:
(காதற்குற்றவாளிகள் என்ற கவிதையிலிருந்து)
கூடத்திலே மனப்பாடத்திலே -விழிகூடிக் கிடந்திடும்
ஆணழகைஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்- அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலேபாடம் படித்து நிமிர்ந்த
விழி-தனிற்பட்டுத் தெரித்தது மானின்விழி!
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்
ஆயிரன் ஏடு திருப்புகின்றான்
காதல்- ஓரங்கநாடகமாக்கி அதையும் கவிதை
வடிவில்வெற்றிகரமாக தந்த பன்முக
ஆளுமையுடையவர் பாவேந்தர்.
தொடரும்.
அன்புடன்,
புதியமாதவி.
**********************
<>பாவேந்தர் கவிதை உலகில்(2)<>

தமிழின் இனிமை என்ற கவிதையிலிருந்து..
பயிலுறும் அண்ணன் தம்பி-அக்கம்பக்கத்துறவின்
முறையார்தயைமிகு உடையாள் அன்னை- என்னைச்சந்ததன்
மறவாத தந்தைகுயில்போற் பேசிடும் மனையாள்-அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளைஅயலவராகும் வண்ணம் -தமிழ்
என்அறிவினில் உறைதல் கண்டீர்!

உலக இலக்கியத்தில் தாய்-மனைவி-மக்கள்உறவுகளை
விட என் தாய்மொழியின் மீதானஎன் உறவு நெருக்கமானது
என்று சொன்னமுதல் கவிஞன் பாவேந்தர் தான்!

இக்கவிதையில் பல்வேறு இனிமைகளை அடுக்கி வரும்போது
இந்த வரிகளில் மனித உறவுகளைச் சொல்லி முடிப்பார்.
அயலவராகும் வண்ணம்அறிவினில் உறைதல்என்ற வரிகளில்
அயலவர்/.அறிவினில் என்ற வரிகள்வெறும் எதுகை மோனைக்காக
அடுக்கப்பட்டவை அல்ல.

'என்னடா இவனுக்கு என்ன பைத்தியமா..பெத்த
தாய்-தகப்பன்,காதல் மனையாள், குழலினிய குழந்தைகளை
விடஎப்படியடா உன் மொழி உனக்கு நெருக்கமானதாக
முடியும்?என்று கேள்வி எழும். பாவேந்தர் அதனால் தான்'
என்னவொ நான் உணர்ச்சி வேகத்தில் பிதற்றுவதாக
நினைகாதீர்கள்,இவரெல்லாம் அயலவராகும் வண்ணம்
தமிழ் என் உணர்வினில்மட்டுமல்ல, என் அறிவினின்
உறைதல் கண்டீர்என்கிறார்.

நாம் இன்றும் கையொப்பமிடும் போது 'என் சுயபுத்தியுடன்'
இதை எல்லாம் சொல்வதாகச் சொல்கிறோம்.அதைத்தான்
பாவேந்தரும் 'என் அறிவினில் உறைதல் கண்டீர்'என்று
சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.தாய்-தகப்பன் வழி
மனிதருக்கு அவரவர் தாய்மொழி அமைகிறது.
இதெல்லாம் அவருக்குத் தெரியும் தான். இரத்த
உறவுகளை விட என் தாய்மொழி மீதுஎனக்கிருக்கும்
நெருக்கமும் காதலும் உரிமையும் எவராலும்பிரிக்கவோ
அழிக்கவோ உரிமைக்கொண்டாடவோ முடியாது என்பதைதன்
'சுயபுத்தியுடன்' சொல்வதாக அவர் எழுதியிருக்கும்தமிழனின்
முத்திரை இக்கவிதை.
*************************
<>பாவேந்தர் கவிதை உலகில்..(3)<>

சங்கநாதம் கவிதையிலிருந்து
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத
தமிழென்று சங்கே முழங்கு..
இந்த வரிகளை வாய்விட்டு சொல்லிப்பாருங்களேன்.
அப்படியே தளர்ச்சி மறையும், புத்துணர்ச்சி கிடைக்கும்.
யோகா , மனப்பயிற்சியாக இந்த வரிகளைத்
தினமும்காலையில் எழுந்தவுடன் சொல்லிப்பாருங்கள்!
************************************************

<>பாவேந்தர் கவிதை உலகில் (4)<>

எனக்கு மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன்
இருவரையும் வெவ்வேறு காரணங்களுக்காக பிடிக்கும்.
சரி இப்போ அதுவல்ல நான் சொல்லவருவது.

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
பாரதியின் வரிகள்.

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்தீராதி தீரரென் றூதுசங்கே!
பாவேந்தர் வரிகள்.

இந்த வரிகளுக்கு நடுவில் நிறைய சரித்திரம் பொதிந்துகிடக்கிறது.
எழுதிய வரிகளுக்கு நடுவில் எழுதாதச் செய்திகளை அவரவர்பார்வையில் எழுதிக்கொள்ளுங்கள்.
இக்காரணத்தினால் நம் தொப்புள்கொடி உறவுகளான
ஈழத்துச் சகோதரர்களுக்கு பாவேந்தரின் கவிதைவரிகள்
மிகவும் நெருக்கமாக இருப்பது உண்மை.
இது உங்களுக்கு, தமிழ் உலகுக்கு ஒரு
செய்தி மட்டும்தான்.
*********************
பாரதிதாசன் கவிதையுலகில்..
தமிழ்த் தேசியக்கவிஞர் பாரதிதாசன் .
தமிழ்த் தேசியத்தை, தமிழ் இனத்தைப்
பற்றிப் பேசும்அனைவரும் நினைவில்
இருத்தி நெஞ்சுருக பாடவேண்டிய வரிகள்..:

ஊர்த்தட்டிப் பறித்திடஉயர்ச்சாதி என்பார் இஃதை
மார்தட்டிச் சொல்வேனடி சகியேமார்தட்டிச்
சொல்வேனடி!
சாதி ஒழிந்திடல் ஒன்று- நல்லதமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால்- மற்றபாதி துலங்குவதில்லை.
சாதி களைந்திட்ட ஏரி-நல்லதண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே-நல்லதண்டமிழ் வாளினைத் தூக்கும்.
நன்றி.
அன்புடன்,
புதியமாதவி.
********************
<>குன்றக்குடி ஆதினத்தில் பாரதிதாசன்<>
Mon, Apr 28, 2008 at 1:44 AM
1957ல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குன்றக்குடி
வருகையின் போதுஅவருக்கு பூரணக்கும்ப
மரியாதை செய்யப்பட்டது.
வழிபாட்டு மேடையில் எரியும் விளக்குகளைப்
பார்த்ததும் "விளக்கெல்லாம் எரிகிறதே.. விழாவா?"
என்றுகேட்டார் கவிஞர்."அடிகளார் வழிபாடு செய்யும்
இடம் " என்றார்கள்.தன் தோளில் கிடந்தச் சால்வையைக்
கையில் எடுத்துக் கொண்டு புரட்சிக்கவிஞர் கோயில்முன்
நின்றார். மடத்து ஓதுவார் ஏ.எம்.சம்பந்தமூர்த்தி அவர்கள்'
விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியவை..
" திருவாசகப்பாடலைஓதினார். மகிழ்ந்த புரட்சிக்கவிஞர்
"அய்யா, நல்லா பாடுறாங்க.
இந்தத் தமிழ்ப்பாட்டைத்தான் நான் விரும்புகிறேன்.
தமிழனை இழிவுப்படுத்தாத - சாதியை வற்புறுத்தாத
சைவத்தை யாரும் எதிர்க்க மாட்டாங்க.
அது இல்லியே" என்றுவருத்தப்பட்டார்.
(நன்றி: யாதும் ஊரே, ஜூலை 2005 இதழ்)

No comments: