அன்பினிய தமிழ் உலக நண்பர்களே!
வணக்கம்.
பாரதிதாசன் விழா தமிழ் உலகில்
கடந்த 21ம்தேதி துவங்கி இன்று
29ம்தேதிவரைநடைபெற்றது.
இவ்விணைய விழாவில்தமிழ் உலக நண்பர்களும்,
நம் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிலிருந்தும்
விழாவுக்கான உரைகளை குறைந்த கால அவகாசத்தில்
செய்து தந்தமைக்காகஅவர்களுக்கு நன்றி சொல்லக்
கடமைப்பட்டுள்ளேன்.
இணைய இதழ் ஆசிரியர்களான திரு.அண்ணா
கண்ணன்(சிஃபி தமிழ்)பதிவுகள் இணைய இதழ்
ஆசிரியர் திரு.வ.ந.கிரிதரன், தென்றல் இணைய
இதழ்ஆசிரியர் திரு.மதுரபாரதி ஆகியோருக்கு
என் இனிய கைகூப்புகளும்,இதயமார்ந்த
நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொருவரும் பல்வேறு பணிச்சூழல்களில்
நள்ளிரவுதாண்டிய நேரத்தில் என்னைஅழைத்து
இதோ உங்களுக்கு கட்டுரை என்று மறவாமல்
தந்தநேயம் என் கண்களைப் பனிக்கச் செய்கிறது.
தமிழ் உலகில் இல்லையென்றாலும் நம் அன்பு வேண்டுகோளுக்குச்செவிமடுத்து குறுகிய காலத்தில்
அவர்களுக்கு பல்வேறுசூழல் சரிவராத நிலையிலும்
அன்பிற்குரிய நண்பர்களும்பேராசிரியர்களுமான முனைவர்.கோவி.இராசகோபால்(தில்லி பல்கலைக்
கழகம்) பேராசிரியர்.பெஞ்சமின் லெபோ(பிரான்சு)
(இவர் நம் தமிழ் உலகஉறுப்பினராகிவிட்டார்கள்)
ஆகியோருக்கு என் அடிமனத்துநன்றிகள்!
இதே போல கவிஞர்.மதுமிதா அவர்கள் உரை தர
ஒப்புக்கொண்டுபின்னர் கணினி அவர் காலை
வாரிவிட எப்படியோ அடிச்சுப்பிடிச்சுமூச்சுவாங்க
ஓடிவந்து ஓட்டப்பந்தயத்தில் வென்ற திருப்தியோடு
அவர் விழா உரை ஈந்த பாங்கு என்னால் எளிதில்
மறக்க இயலாது.அவர்களுக்கும் என் சிரம்தாழ்த்துக்கள்.
நன்றிகள்!
விழாவில் பங்கெடுத்துகொண்ட திரு.அன்பு, அய்யா.சிங்கை.
திரு.கிருஷ்ணன், அய்யா.இராமகி, திருவாட்டி.புதிய
மதாவி, திரு.இண்டிராம், அனலை திரு.திரு., சிறீ.சிறீதரன்,
ரியாத் திரு.வெற்றிவேல், மலேசியா.சுப.நற்குணன்,
ஆகியோருக்கு என் கனிவான நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
அய்யா.இராமகி அவர்கள் விடுதலை ஆசை பாடலை
விழாவில் இட்டுஅதை யாரேனும் பாடித்தரவேண்டும்
என்ற வேண்டுகோளை வைத்தார்கள்.ஒருசிலரை
தொடர்பு கொண்டேன். ஒரு சிலர் இயலாமையைத்
தெரிவித்தாலும்என் இனிய அன்புச் சகோதரர் அழகி
விச்வநாதன் மறுநாளே பாடி... சும்மா அற்புதமாக
கணீர் குரலில் பாடி அசத்தினார்.
அதை வலையில் பதிக்க வேண்டும்என்று வந்தபோது
நண்பர் இலங்கை எம் ரிசான் செரீப் உதவினார்.
ஆக இந்த தேனினுமினிய பாடல் உங்கள் காதுகளில்
ரீங்காரமிட உதவிய இரு நல்லுள்ளங்களுக்கும் இந்த
நேரத்தில் நன்றி சொல்வதில் மகிழ்கிறேன்.
கேளுங்கள்
கேட்டு மகிழ்ந்து பின்னூட்டமிடுங்கள். அதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும்உற்சாகம்,ஊக்குவிப்பு!
விடுதலை ஆசை
(தனித்தமிழ் வண்ணம்)
தனதன தான தனதன தான
தனதன தான தன தானா
கருவிழி ஓடி உலகொடு பேசி
எனதிடம் மீளும் அழகோனே
கழைநிகர் காதல் உழவினில் ஆன
கதிர்மணி யே,
என் இளையோய் நீ பெரியவ னாகி
எளியவர் வாழ்வு பெருகிடு மாறு
புரியாயோ? பிறர்நலம் நாடி
ஒழுகிணை யாக இருசெவி வீழ
மகிழேனோ?
தெரிவன யாவும் உயர்தமி ழாக வருவது
கோரி உழையாயோ? செறிதமிழ் நாடு
திகழ்வது பாரீர் என
எனை நீயும் அழையாயோ?
ஒருதமி ழேநம் உயிரென யாரும்
உணவுறு மாறு புரியாயோ?
உயர்தமிழ் நாடு விடுதலை
வாழ்வு பெறஉன தாசை பெருகாதோ?
நண்.நாக இளங்கோவன் நட்சத்திர வாரத்தில்
சிக்கி நம் விழாவில்பங்களிப்பு குறைந்து போனது
ஒருவகையில் துரதிர்ட்டம்தான்!
இறுதியாக என் வழக்கமான பணியுடன்,
இவ்விழாச் சிறக்க ஒருங்கிணைத்தல்,
ஒவ்வொருநாளும் தமிழ் உலக விழா உரையை
வலைப்பதிவில் இடுதல் போன்ற பணிகள்
என் பங்களிப்பைச் செய்ய இயலாமற் போனது
இன்னொரு துரதிர்ட்டம்.
விழாவில் பங்கேற்க எண்ணியும் இயலாமற்
போனவர்கள் அடுத்த ஆண்டில்இன்னும்
உற்சாகத்தோடு பங்கெடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
எல்லோருக்குமான என்
இனிய நன்றிகள் மீண்டும்!
நட்புடன்,
ஆல்பர்ட்_..
**************************
நண்பர் ஆல்பர்ட்,
சிறப்பாக எழுச்சி தரும் வகையில் பாவேந்தர் விழாவை நடத்தியமைக்குப் பாராட்டுக்கள். பல்வேறு பணிகளுக்கு இடையேவலைப்பதிவிலும் சேர்த்து வைத்ததற்கு உங்களைஎவ்வளவு பாராட்டினாலும் போதாது.
இணைய உலகில் பல இடங்களிலும்பாவேந்தர் பற்றிய கட்டுரைகள் வந்திருந்தன. பார்ப்பதற்கு இதமாக இருந்தது.மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அன்புடன்,
நாக.இளங்கோவன்.
*****************************************************************
அன்புசால் நண்பர் ஆல்பர்ட் அவர்களுக்கு,
கனிவான கைகுவிப்பு!
மகத்தானதொரு பணியை ஒரு
வாரமாகச் சத்தமின்றி -ஆர
வாரமின்றிச் செய்து முடித்திருக்கறீர்கள்!
'இருதயம் மலரக்
கரமலர் மொட்டித்துக்
கண்துளி அரும்பச்
சாயா அன்பினை நாள்தொறும்' அளித்து
நன்றி கூறுகிறேன்.
வாழ்க தங்கள் தமிழுள்ளம்
வளர்க தங்கள் தமிழ்ப் பணி!
அப்பழுக்கில்லா அப்பணியில்
எப்போதும் பங்குகொள்ள அணியமாகவே உள்ளேன்.
நனி நன்றியன்
பெஞ்சமின்.
************************************************************
அன்பினிய ஆல்பர்ட் அண்ணன்,
பாவேந்தரின் விழாவை தனிமனிதராக நடத்திய
உங்களுக்கு நன்றிஅடுத்த ஆண்டு பண்புடன்
குழுமம் பாவேந்தர் வாரத்தை மிகச்சிரத்தையோடு
முன்னெடுத்துச் செல்லும். அந்தப் பொறுப்பை
இப்போதே நீங்கள் ஏற்றுக் கொள்ளஅன்புடன்
வேண்டுகிறேன்
பாவேந்தர் வாரத்தில் புதிய போட்டிகளும்
பாவேந்தர் வாரத்தில் புதிய போட்டிகளும்
பாவேந்தர் குறித்த செய்திப்பரிமாற்றங்களும்
பாவேந்தர் பாடல்களில் தங்களுக்கு
விருப்பமானவற்றைப் பகிர்ந்து கொள்ள
ஏதுவானஇழைகளும் உருவாக்கப்படும்.
நண்பர்கள் ஒத்துழைப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
அடுத்த தமிழ்ப்புத்தாண்டிலேயே இது குறித்த
அடுத்த தமிழ்ப்புத்தாண்டிலேயே இது குறித்த
அறிவிப்பை நாம் செய்யலாம்மீண்டும் உங்களுக்கு
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
நட்புடன்
நட்புடன்
உங்கள்
ஆசிப் மீரான்_..
2 comments:
//இந்த நொடியில் சந்தோசிப்புகளை சகலருக்கும் பகிர்ந்தளிக்கவும்; வாடி வதங்கியிருப்போரை தேடிச் சிறகடித்துப் பறக்க வைக்கச் சிந்தனை செய்வோன்! ஆம்..இந்த நொடியில் மகிழ்ச்சிப்பூக்களை மலர விடுவோம்!வாருங்கள்!! //
இதைப் படிக்கும் இந்த நொடியில் சந்தோஷப் பூக்கள் நிஜமாகவே என் மேல் வீழ்ந்தது....
அன்புடன் அருணா
தங்கள் வருகைக்கு நன்றி.
அப்படியா?! என் வேலையை
மிச்சப்படுத்திவிட்டீர்கள்.
உங்கள் நண்பர்களையும்
இங்கு அறிமுகப்படுத்துங்கள்.
ஆல்பர்ட்.
Post a Comment