Monday, April 21, 2008

பாரதிதாசன் பெண்ணுரிமை-சிங்கை கிருஷ்ணன்

* **பாரதிதாசன் தமிழ்***

Thu, Apr 24, 2008 at 9:05 AM

தமிழ் என்றால் இனிமை எனப் பொருள்

கண்டவர்கள் தமிழர்கள். கவிதையில்இனிமையைக்

காண விழைந்த ஆர்வமே ஒரு மொழியை'

இவ்வாறு இனிமை எனக் கருதச் செய்தது.

சொற்கள் இனிமையாக ஒலிக்கும் போது

கேட்டும் ஈடுபாடும், எண்ணத்தை

ஈர்க்கும்ஆர்வம் எழுகிறது.

மக்களுக்காகப் பாடியவர் மக்கள் கவிஞர்

பாவேந்தர் பாரதிதாசன். தம்முடையகவிதை

அவர்களிடம் சென்று பயனிக்க வேண்டும்,

சமுதாயம் முன்னேற வேண்டும்கருதியவர்.

கலை இன்பம் மட்டுமே கவிதைஎன்று
கருதாமல் வாழ்வுக்குப் பயன்படும்
வகையாக அதனை மாற்றி அமைத்து
வெற்றிகண்டார்.

அந்த மாற்றம் இலக்கிய பயணமாக கொண்டு
பொதுமக்கள் சிந்தனையே இருவருடையபுரட்சி
மனப்பான்மைக்கு வித்தாக வித்திட்டார்.
வானத்தைப் பாடவந்தார் கவிஞர்.

வெறுமனே பாடாது மக்கள் நிலையினை
மனதின்கொண்டார். இயற்கையோடு மனிதனை
ஒப்பிட்டார்.விரிந்த உலகில் மனிதன் சிறிய உயிர்;
மக்கள் எல்லோரும் நிகர். அவர்களுக்குகிடையில்
ஏற்றத்தாழ்வு கற்பிப்பது தவறுஎன்னும் உயர்ந்த
கருத்தை எளிமையாகக் பாடினார், உணர்த்தினார்.
இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதிஇருக்கின்றன்
தென்பானும் இருக்கின் றானேஎன்று தனது குமுறலை
உணர்ச்சியோடு படைத்துக்காட்டுகிறார்.

எத்தனை பெரிய வானம்எண்ணிப்பார் உனையும்
நீயேஇத்தரை கொய்யாப் பிஞ்சுநீயதில்
சிற்றெறும்பேஅத்தனை பேரும் மெய்யாய்பித்தேறி
மேல்கீழ் என்றுமக்கள்தாம் பேசல்
என்னே-அழகின் சிரிப்பு-
மக்களிலே ஏற்ற தாழ்வில்லை.
இதனை,மிக்குயர்ந்த சாதிகீழ்ச் சாதி என்னும்
வேற்றுமைகள் தமிழ்க்கில்லை தமிழ்ர்க் கில்லை
பொய்க்கூற்றே சாதி எனல் ஆரிய யச்சொல்புதுநஞ்சு

பொன்விலங்கு பகையின் ஈட்டிகடற்குமிழி உடைந்திடுக
சாதி வீழ்ககடல்மக்க ளிடைவேந்தர் மறைந்து போக
-பாரதிதாசன் கவிதை தொகுப்பு-
கவிதையின் சிறந்த பண்பு தெளிவு
எனக் கம்பர் குறித்திருக்கிறார். ஆனால்சொற்கள்
உண்மையில் எளிமையாக இருந்தாலும் உள்ளத்தில்
தெளிவு உண்மையில்குழப்பமின்மை இருந்தாலொழிய
எழுத்தில் தெளிவைக் காண இயலாது.
உள்ளத்தில்உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே
ஒளியுண்டாகும். என்பது தெளிவை எளிதாக அடையும்
வழி.பாரதிதாசன் பாடல்களில் சொற்களைப் படிக்கும்
போதே உள்ளத்தில் உணர்ச்சிபாய்ந்து தெளிவாகிவிடுகிறது.
தமிழை உயிராக கொண்டு வாழ்ந்தவர் பாரதிதாசன். உலகில் உள்ள அனைத்துகும்மேலாகத் தமிழ்க் கருதினார். தமிழே இருக்குப் பாடல்களின் கருப்பொருளாக அமைந்ததுஎனலாம். கடந்த நூற்றாண்டில் இலக்கிய வரலாற்றிலும் இவர் அளவுக்குத் தமிழைப்பற்றிப் பாடியவர் வேறு எவரும் இல்லை எனலாம்.தம் சிந்தை, சொல், செயல்எல்லாவற்றிலும் தமிழை கொண்டிருந்தார்; தமிழோடு ஒன்றிப் போயிருந்தார்.பக்திஇயக்கம் போலத் தமிழியக்கம் காண வேண்டும் என்று விரும்பினார். தமிழுக்கு ஊறுஎன்றால் உயிர் கொடுத்தேனும் காக்கவேண்டும் என்று முழங்கினார். தமிழ் உணர்ச்சியைஇளைஞர்கள் உள்ளத்தில் மிகுதியாக வளர்த்து ஆக்கப்பணிக்கு வழிகாட்டியாகஇருந்தார். இவருடைய புரட்சி மனம் தமிழில் முளைத்துச் சமூகத்தின் பிறதுறைகளுக்கும் கிளைத்தது எனலாம்.

செந்தமிழ், பைந்தமிழ், தீந்தமிழ், உயர்தமிழ், தண்டமிழ், இன்பத்தமிழ்,செழுந்தமிழ், ஊரறியும் தமிழ், தகத்தகாயத் தமிழ், மங்காத தமிழ், வீரஞ்செய்கின்ற தமிழ், நற்றமிழ் தமிழ், முத்தமிழ், தெள்ளு தமிழ், அந்தமிழ்,பாரோர் புகழ்தமிழ், கன்னல் தமிழ், பச்சைதமிழ், தேனிகர்த்த தமிழ், குளிர்தமிழ், கனிவிளைக்கும் தமிழ், கனிச்சாற்றை நிகர்க்கின்ற தமிழ், பாவலர் தமிழ்,தீங்கிலாத் தமிழ், பழந் தமிழ், திருநல்கும் தமிழ், தெளிதமிழ், சுவைத் தமிழ்,அளிதமிழ், நற்றூய்தமிழ், தன்னேரிலாத தமிழ், மும்மைத்தமிழ், சங்கத்தமிழ்,கனிதமிழ், விளைதமிழ், பழகுதமிழ், விளைதமிழ், இசைதமிழ், கூத்துத்தமிழ்,பொருள்தரும் தமிழ், இசைத்தமிழ், இயற்றதமிழ், ஆடற்தமிழ், அறங்காக்கும்தமிழ், பொருள்தரும் தமிழ், உரம்பெய்த செந்தமிழ், ஒண்டமிழ், திருவானசெந்தமிழ், மாணுயந்த தமிழ், அணிதந்த செந்தமிழ், களிப்பருஞ் செந்தமிழ்,கண்ணான செந்தமிழ், பொன்னான தமிழ், எழிற்றமிழ், அமுதெத்த தமிழ், வியத்தகுசெந்தமிழ், பாங்குறு செந்தமிழ், அருந்தமிழ், இன்தமிழ், ஆர்எழில்சேர்தமிழ், நிறைதமிழ், பெருந்தமிழ், உயிர்நிகர் தமிழ், மன்னும் தமிழ்,பாலோடு நிகர் தமிழ், ஆசைத்தமிழ், வண்ணத்தமிழ், அருமைச் தமிழ், தன்னிற்சிறக்க தமிழ், அழகிய தமிழ், கன்னித்தமிழ், ஓதுதமிழ், கூறுதமிழ், துய்யதமிழ், கொஞ்சுதமிழ், ஏறுந்தமிழ், விந்தைத்தமிழ், கனித்தமிழ்
இப்படி தமிழை சிறப்பித்து குழந்தையாக சீராட்டினார்.

உலகின் முதல்மொழியாக தமிழைக் கருதி பரிதி, திங்கள்,விண், விண்மீன்கள், கடல்ஆகியவை தோன்றிய போது தமிழ் பிறந்தது என அதன் பழமை சுட்டிகாட்டியுள்ளார்.தமிழின் இனிமையைப் பலவாறு விரித்துச் கூறுகிறார். கனிச்சுளை, கழைசாறு,மலர்தேன்,காய்ச்சிய பாகு, பசும்பால், குளிரிளநீர் ஆகியவை இனிமை பயப்பனஎன்றாலும் அவற்றினும் இனியது தமிழ். சோலையில் பாடும் வண்டின் ஒலி,ஓடையின்ஓசை,குழலிசை, யாழ்ன் அமுதப்பண், குழந்தைகள் மழலைச் பேச்சு, பெண்ணின் முத்தம்ஆகியவை விரும்பத்தக்கவை. அவற்றினும், தமிழையும் தன்னையும் உடலும் உயிருமாகக்கருதிக் களிக்கிறார்.
உடம்பை வளர்க்கின்றன சுவையான உணவைக் காட்டிலும், தமிழர்களின் உயிரையும்உணர்வையும் வளர்க்கின்ற தமிழை இனிமையாகக் கருதினார். பெண்ணுடன் கூடிப் பெறுகிறஇன்பத்திலும் தமிழ் இன்பம் பெருமிதமானது என்பதை'' மங்கை ஒருத்தி தருஞ்சுகமும் - எங்கள்மாத்தமிழ்க்கு ஈடில்லில்லை'' என்கிறார்.தமிழ் வெல்ல வேண்டும் என்று பாடும் பாரதிதாசன், வெறும் வாழ்த்து முழக்கதோடுநிறுத்தாமல் அதன் வளர்ச்சிக்குத் தொண்டு செய்யுமாறு வேண்டுவதோடு, தொண்டும்புரிந்தார். வெளியுலகத்திலும் சிந்தனையிலும் உதித்துள்ள புதுமைகளைத் தமிழில்தரவேண்டும் என்றும், அவைகளுக்கு தமிழிலில் பெயர்கள் அமைத்திடல் வேண்டும்என்றும் விரும்பினார்.காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சி தமிழ் எய்த வேண்டும்என்ற கவிஞரின் ஆவலை உணரமுடிகிறது.

தமிழ் உயர்வான மொழி என்று சொல்லி நம்மை நாமேஏமாற்றிக் கொள்வது கூடாது; புதிய ஒளிமிக்க தமிழை காண வேண்டும்,முன்னேற்றம் அடையும் மொழிகளுள் தமிழும் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்றுவிரும்பினார்.தமிழ் தனித்தியங்கும் தன்மை உடையது என்று அறுதிட்டு கூறுகிறார்.
தமிழ் வளர்ச்சி பற்றிய கவிஞரின் கனவு குறிப்பிடத் தக்கது.'' வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயேமாண்புகள் நீயே என் தமிழ்த் தாயேவீழ்வாரை வீழாது காப்பவள் நீயேவீரனின் வீரமும் வெற்றியும் நீயே.
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,SingaporeFor your Book Mark

பாரதிதாசன் பெண்ணுரிமை
----------------------------------- -------------
பாரதிதாசன் ''குடும்ப விளக்கு''

```````````````````````````````````
பாரதியின் பெண்ணுரிமைக்குப் பின் தமிழ்த் தென்றல்
திரு.வி.க பெண்மையை ஏற்றிப் போற்றினார்.
இவற்றின் பின்னும் இருட்டு முழுதாய் மறையவில்லை.
மகளிர்க்குச் சம உரிமை, சமவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்
என்பதற்காக எழுச்சிக் குரல் கொடுத்தவர்
பாவேந்தர் பாரதிதாசன்.

காலத்திற்கு ஏற்ற கருத்து மாற்றமும் இருள் திரையைச்
சற்றே விலக்கியது.ஆனால், உரிமைகள் வந்துவிட்டன
என மூச்சிரைக்க குரல் கொடுக்கும் பெண்கள்,
தங்கள் தோள் மீது ஒரு சுகமான சுமைகள் மிக நளினமாக
ஏற்றப்பட்டு விட்டதை இப்போது உணரத் தொடங்க உள்ளார்கள்.

வேலைக்கு செல்லும் உரிமையைப் பெற்றுள்ள பெண்கள், தன்
கடமையை ஆற்றுவதில் எத்தனை சுறுசுறுப்புக் காட்டுகிறாள்.
எத்தனை பரபரப்பு. இதனால் மன இறுக்கம்.

ஆடவரின் பொறுப்பு உணர்ச்சி குறையகுறைய மகளிரின்
உழைப்புச் சுமை பன்மடங்கு கூடுகிறது. அதுமட்டுமல்ல.
கணவன் மனைவியிடையே பரிவும்- அன்புப் பரிமாற்றமும்
குறைகிறது.

கவிஞரின் நூல்களில் தனிச்சிறப்பு வாய்ந்த 'குடும்ப விளக்கு
'ஐந்து பகுதியாக அமைந்த இந்த இல்லற காவியம். ஒருவர்
இல் வாழ்க்கைத் தொடங்கி முதுமையடையும் வரையுள்ள
முக்கிய நிகழ்வுகளை வள்ளுவர் கண்ணோட்டத்தில் விரிவாக
விளக்குகிறது.

வீட்டின் அன்றாட நிகழ்வுகள்-நிகழ்ச்சிகள்,
விருந்தோமபல், காதல்-திருமணம், மகப்பேறு, முதியோர் காதல்
என்னும் வாழ்க்கையின் கூறுகள் சிறப்பாக எடுத்து இயமபட்டுள்ளது.
இல்வாழ்க்கை முறையில் கவிஞர் கொண்டுள்ள ஈடுபாடு கனிந்து
உள்ளக்கனிவாக வெளிவந்துள்ளது.

தனது 67 வரிக் கவிதையாக 1935-ல் 'சுப்ரமணிய பாரதி கவிதா
மண்டலம்'' என்ற இதழில் ''தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை''
என்று தொடங்கும் கவிதை, ஒரு நாளில் குடும்பத்தலைவி
ஒருத்தி மிகப்பொறுப்போடு இல்லறக் கடமைகளை இனிதே
முடித்து இன்பம் அடைந்தால்; சிறிதயர்ந்தாள் என்று முடிகிறது.

அந்த நெடிய கவிதையின் விரிவாக்கச் சித்திரமாகத்தான்
1942 ஆம் ஆண்டில் அவர் எழுதிய
''குடும்ப விளக்கு'' - ஒருநாள் நிகழ்ச்சி
என்கிற புதுமைக் குறுங்காவியமாக அமைந்தது.
அன்புப் பிணைப்பினால் இல்லறக்கடமைகளை,
வேலைகளை ஓயாது ஒழியாது ஒன்று விடாமல்

தானே முகம் சுளிக்காது -அயர்ந்துவிடாமல்
அவற்றை முடிக்கிறாள்.

குடும்ப விளக்கு 1942-ஆம் ஆண்டு வெளிவந்தபோது பெண்கள்
வெளியில் சென்று வருவாய் ஈட்டும் நிலை வந்துவிடவில்லை.
இந்த சூழலில்தான் குடும்ப விளக்கு வெளிவந்தது.
கணவன் மனைவி இருவரும் தன்னலம் கருதாது,
இரவில் தன் கணவனைத் தனித்து
சந்திக்கின்ற மனைவி பொது நலத்துக்காக நாம்
உழைக்கவேண்டும் என்ற கருத்தைத்
தன் கணவனுக்கு உணர்த்துகிறாள்.

இதன் தொடர்ச்சியாக 1944 ஆம் ஆண்டில் வெளியான
குடும்ப விளக்கு இரண்டாம் பகுதி,

''விருந்தோமபல்''
''விருந்தினரை வரவேற்பான் தமிழன்;
அந்த விருந்தினர்க்கு நலம் செய்வான்
தமிழன்....''
-என்கிற சிறு நூல்.
பெண்களுக்கு கல்வி வேண்டும் என்கிற கருத்தை மையமாக
வைத்து ஆழமாகவே குரல் கொடுக்கிறது.

''கல்வி இல்லாத பெண்கள்
களர் அந்நிலத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள் விளைத லில்லை! -- என்கிறார்.

மூன்றாம் பகுதியான 'திருமணம்' 1952 ஆம் ஆண்டில்
வெளிவந்தது.

தொடர்ந்து நான்காம் பகுதி மக்கட்பேறு, ஐந்தாம் பகுதிகளிலும்
முதியோர் காதல், மகளிர் கல்வி, ஒழுக்கம், குடும்பப் பொறுப்பு,
ஒழுக்கம்,குடும்பப் பொறுப்பு,
காதல், குழந்தை வளர்ப்பு போன்ற இனிமையாகவும்,
சுவையாகவும்,புதுமையாகவும் சித்தரித்தார் பாவேந்தர்.

கால மாற்றத்திற்கேற்ப, கால மாற்றத்தை நன்கு புரிந்துக்கொண்டாற்
போல் ''குடும்ப விளக்கும் குண்டுக் கல்லும்'' என்கிற சிறு நாடகத்தை
நகைசுவையுடன் புதிய சிந்தனைப் போக்கில் உருவாக்கினார்.

''குடும்ப விளக்கு'' எழுதிய 1942 ஆம் ஆண்டிலே வெளிவந்த
இசையமுது, முதற்பகுதியில்,
''ஆண் உயர்வென்பது பெண் உயர் எனபதும்
நீணிலத் தெங்கிலும் இல்லை''
என பாவேந்தர் உறுதியிட்டு கூறியுள்ளார்.
சமுதாயக் கருத்து மாற்றத்துக்கு வித்திட்ட பாவேந்தர்,
மகளிர்உரிமைப் போராட்டத்திற்கும் வித்திட்டவர்.
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
*********************************
<>*புரட்சி.*(2)<>

புரட்சி என்றால் அடிப்படையில் மாறுதல்எனக்கூறலாம்.
ஆனால், இப்போது பொருள் இழந்த ஒரு பொதுச் சொல்லாகி
வருகிறது. புனையும் வெளிப்பூச்சும் புரட்சி எனப்
போற்றப்படுகிறது.மேலோட்டமான எந்தச் செயலும்
உயர் மட்டத்தினை அடைய இயலாது.

சமுதாயத்தில் நிலவிடும் ஓர்எண்ணமோ, நிகழ்ந்திடும்
ஓர் அமைப்போ,இயங்கிடும் இயக்கமோ தனது நிலையில்
முதன்மையாக நின்று , நிலைமாறாமல்போராடி நிகழ்த்திடும்
மாற்றமும்மாற்றத்திற்குக் காரணமான வழிமுறைகளுமே
புரட்சி எனப்படும்.
[இப்போது புள்ளிஅசைந்தாலும், அல்லது சில பேர்கள் சேர்ந்து
அசைந்தாலும், அல்லது சினிமா அரங்கில் சில நடிகர்களுக்கு
முதல் காட்சிக்கு கூட்டம் கூடினாலும் புரட்சி எனப் புகழ்கிறார்கள்]

ஒரு விஷயம் அதன் பழக்க வழக்க நிலையிலிருந்து மாற்றம்
அடைவதும் ,அதிலும்அது அடியோடு தலைகீழ்நிலை
அடையும்படி மாற்றம்தான் புரட்சி என்று புரட்சியாளர்
பெரியார் ஈ வே ரா விளக்கம்அளித்துள்ளார்.
தலைகீழ் மாறிய பின்பும் தகுதி உடையதாய் திகழ்திட வேண்டும்.

புரட்சி என்ற சொல்லுக்கு மு,வ தரும் விளக்கம் :
"புரட்சி என்னும் சொல்லைக்காண்போம். சொல்லுக்கு நேர்ப்
பொருள்புரளுதல், மாறுதல் அடைதல் என்பது.அரசியலில்
பெரிய மாறுதலுக்கு அடிப்படையான சில நிகழ்ச்சிகளைக்
குறிக்க அச்சொல்வழங்கியகாரணத்தால் அரசியல் தொடர்பு
பெற்றுவிட்டது; அதனால் அச்சொல்லுக்குப் பழங்
காலத்தில் இல்லாத புதுபொருள் இப்போது வழங்குகிறது.
அன்றியும் அந்தச்சொல்லின்ஒலியில் வல்லினம்
மிகுந்திருப்பதால் அது வன்மையான உணர்ச்சியுடன் சேர்ந்து
ஒலிக்கும் தன்மை பெற்றுள்ளது. "

தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம்தோன்றியப் பகுத்தறிவு
நெறிக் கருத்துக்கள் பரவத் தொடங்கிய காலத்தில் பாரதிதாசனாரின்
உள்ளம் அந்தக் கருத்துக்களிலே ஆழப்பதிந்தது.அவர் கவிதைகளின்
மூலம்சமுதாயத்தில் நிலவி வந்த குருட்டு நம்பிக்கை,
மூட பழக்க வழக்கங்களையும் அழுத்த திருத்தமாகக் கண்டித்தார்.
பகுத்தறிவு நெறிகருத்துகளை மிகத் தீவிரமாக பரப்பத் தொடங்கினார்.

பாரதிதாசன் அரசியல் கண்ணோட்டத்தை விட்டுச்
சமுதாய நாட்டம் கொள்வதற்குத்தன்மதிப்பு காரணமாக இருந்திருக்
கிறது.பாரதியாரோடு நெருங்கிப் பழகிப்பாடல்எழுதி வந்த காலத்தில்
கிடைக்காத 'புரட்சி கவிஞர்' பட்டம் பகுத்தறிவு நெறிக்
கருத்துகளை அஞ்சா நெஞ்சத்துடன் பரப்பத் தொடங்கிய
போதுதான் மக்களால்மகிழ்ந்து வழங்கப்பட்டது.

"புரட்சி கவிஞர் " என்றால் இந்த நூற்றாண்டில் வேறு
யாரையும் குறிக்காமல் பாரதிதாசன்ஒருவரையே
குறிக்குமாறு தமிழிலக்கியவரலாற்றில் சிறப்பிடம்
பெற்றுள்ளார்.

பாரதிதாசன் புரட்சிக் கவிஞராகமாறியதற்குச் சமுதாயமும்
இலக்கியமும் அடிப்படையாக இருந்தன எனலாம்.பகுத்தறிவு
இயக்கம் சிலருக்குச் சமுதாயப் பார்வையாக மாறியது.
இதே பகுத்தறிவு இலக்கியப் பயிற்ச்சிப் பட்டை
தீட்டிற்று. ' பிரெஞ்சு ஆட்சியின் கீழ்ருந்த புதுச்சேரியின் பிரஞ்சு
கல்வியும்,காந்தியடிகள்இந்திய விடுதலை போராட்டமும்,
சமுதாயச் சிந்தையோடு பாடிய அச்சமில்லாப் பாரதியின்

தாக்கமும் இன்றியமையாததாக இருந்தது.அத்துடன் இலக்கி
யத்தை இதற்கு பயன்படுத்திக்கொண்டார். எனவே பாரதிதாசன்
இலக்கிய குரலை , மக்களை நோக்கி,சமுதாயத்தை நோக்கி
எழுப்பினார். அது சந்து பொந்துகளில் எதிரொலித்து.அதுவே
ஒரு புரட்சியாளராக இவரை மாற்றியது.

ஒரு நல்ல கவிஞனால், ஒரு எழுத்தாளனால்இந்த சமுதாயத்தை
மாற்ற முடியும்,பாதிப்பை , மாற்றத்தினை ஏற்படுத்தமுடியும்
என்பதற்க்கு " புரட்சி கவிஞர்
பாரதிதாசன் " ஓர் எடுத்துக் காட்டு.

" தாழ்வில்லை உயர்வில்லை
சமமென்ற நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி


-- அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
************************

<>பாரதிதாசனின் " எதிர்பாராத முத்தம் "<>

Wed, Apr 23, 2008 at 8:07 AM
**********************************
பாரதிதாசனின் கவிதைகளில் " எதிர்பாராத முத்தம் '
ஒரு காதல் கதை.
துன்பியல் முடிவு கொண்டது.
பல ஆண்டுகளுக்கு முன் "பொன்முடி " என்ற
தலைப்பில் திரைப் படமாக வந்தது.

காதலன் - தலைவன் பொன்முடி. காதலி தலைவி பூங்கோதை.
கடந்த ஆண்டு வரை இரண்டு பேரும் வாங்காத பண்டமில்லை.
உண்ணும்போது மனம் வேறுபட்டதில்லை; 'அத்தான்' என்று
அழைக்காத நேரமில்லை ;
அத்தை மகளைப் பிரியாத அத்தான் !

இத்தனை இருந்தும் இரு குடும்பம் பகையில் மூழ்கியிருந்தது.
இதனை இருவரும் நினைந்தனர். சந்தித்தனர் தண்ணீர் எடுத்து
வரும் வழியில்.தழுவிக் கொண்டனர்

உள்ளமும் உடலும்.... காலடி ஒன்று எடுத்து வைப்பாள்;
திரும்பிப் பார்ப்பாள். அவன் அவளின் ஒய்யார நடையினிலே
சொக்கி நிற்பான்.

பூக்கட்டிப் பண்டாரம் ஒருவனின் உதவியுடன் இருவரும்
சந்திக்கின்றனர்.
பெண்ணின் தந்தை அவனைப் பிடித்து ,புன்னையில்
கட்டி துடிதுடிக்க அடித்தான்.

பண்டார வேடத்தில் மீண்டும் சந்திக்கிறான்
காதலியை. மகன் அடிபட்ட செய்தி
கேட்டு வருந்துகிறார்கள் பெற்றோர்கள்.

' கொஞ்சம் நாள் சென்றால் மறப்பான்
இந்த குளறுபடியை..."
என்று எண்ணி பொன்முடியை வடநாட்டிற்க்கு
முத்து வியபாரம் செய்யஅனுப்புகிறார்கள்.

பிரிவுத் துயரால் வாடுகிறாள் பூங்கோதை. தன்
காதலனை காண இரவோடு இரவாகக்
கிளம்புகிறாள் பூங்கோதை, வணிகச் சாத்து
துணையோடு. வடக்கே சென்ற பொன்முடி
வடநாட்டு முனிவர் கேட்ட பொருள் கொடமல்
அவர் தம் பகையுடன் மீள்கிறான்.
பூங்கோதை தெற்கிருந்து வடக்காக; அவன்
வடக்கிருந்து தெற்காக. எதிர்பாராத
சந்திப்பு;
எதிர்பாராத முத்தம்; எதிர்பாராது முடிவு.
மரத்து மறைவிலிருந்து வாளை
வீசிப் பொன்முடியை வீழ்த்துகிறான் வடவன் சயந்தன்.

" தீர் தமிழர் உயர்வினுக்குச் செத்தான் ; - அன்பன்
செத்ததற்குச் செத்தாள் அத் தென்னாட்டு அன்னம் ! "
இருவர் தந்தைமாரும் தருமபுரம் மாசிலாமணித்
தேசிகரிடம் சென்று

"தம் மக்கள் துயர்ச் சரிதம் சொல்லுகிறார்கள்".
அவர், ' வடநாட்டில் சைவம் வளர்ப்போம் ;
கொலை நாட்டம் போகும் ! 'என்று ஆறுதல் கூறி,
குமரகுபரரை வடநாட்டுக்கு அனுப்புகிறார். எனினும் ,

"அழுதிடு நாய்கன்மார்கள்
அழுதுகொண்டே மீண்டார்கள்" !
- இப்படி கதை முடிகிறது.

கவிஞரின் ஏடுகளுள், கவிதை நயத்தால் சிறப்புறும்
நூல்களில் ' எதிர்பாராத முத்தம்
' குறிப்பிடத்தக்கது.

பெண்கள் நீராடும் காட்சி. வழக்கமான வருண்னையில்
கொஞ்சம் தற்குறிப்பேற்றமும்
கலந்து
கவிதையின் சுவையை உயர்த்தியுள்ளது.
'பச்சிலைப் பொய்கையான
நீலவான் பரப்பில் தோன்றும்
கச்சித் முகங்கள் என்னும்
கரையிலா நிலாக் கூட்டத்தெ,
அச்சமயம் கிழக்குச்
சூரியன் அறிந்து நாணி
உச்சி ஏறாது நின்றே
ஒளிக்கிறான் நொச்சிக்குப் பின் "

மங்கையர்கள் பொய்கையில் குளிக்கிறார்கள்,
காலை நேரம். பொய்கை கரையிலுள்ள
நொச்சிச் செடி,எழுந்து வரும் சூரியனை மறைக்கிறது.
அவ்வளவே !

கறையுள்ள நிலவையே பார்த்துப் பார்த்துப்
பெருமிதம் கொண்டோன் கதிரவன். இங்கேயோ
கச்சிதமுகங்களாம் கரையிலா நிலாக் கூட்டம் !
எப்படி விழிக்க முடியும் ? மறைகிறான் ;
இதுதான் கற்பனை.

பொன்முடியின் உள்ளத்தில் பூங்கோதையின்
ஒளியில் ஒன்றுபட்டுக் கிடக்கிறது.

' கண்ணில் ஒளி உண்டு ; பார்வை இல்லை ;
' கட்புலனின் அறிவையும் இதயம் கொண்டுவிட்டது.
கோதையின் மடல் வருகிறது.
தணலிலே நின்றிருப்போர்
தண்ணீரில் தாவுதல் போல்
எழுத்தினை விழிகல் தாவ,
இதயத்தால் வாசிக்கிறான்.!

இரகசியம் உள்ளோர் தவிர்க்க முடியாத ஒன்று
' இதயவாசிப்பு'
ஆனால் இங்கே அதுமட்டுமல்ல நிகழ்வது ;
இதயமே செய்திகளை உறிஞ்சிக் களிக்கிறது
பத்தான திசை பரந்த
பரம்பொருள் உயர்வென்கிறார்கள்;
அப்பொருள் உயிர்க் குலத்தின்
பேரின்பம் ஆவது என்று
செப்புவர் பெரியார் யாரும்
தினந்தோறும் கேட்கின்றோமே
அப்பெரியார்க ளெல்லாம்,
.......................................
கைப்பிடித் தணைக்கும் முத்தம்
ஒன்றேனும் காணார் போலும் !

கண்ணாளன் வந்துவிட்டான். கன்னத்தில் வாய்
அது தாமரை போய்ச் சந்தனத்தில்

புதைந்தது போல இருந்ததாம்.
" தமிழ் சுவடிக் கன்னத்தில்
இதழ் உணர்வை
நேமமுறச் செலுத்தி
நறுங்கவிச் சுவைலள்
நெடுமூச்சுக் கொண்ட மட்டும்
உறிஞ்சி ...... " ச் " சென்று
முடித்தான் முத்தம்....."

================================================
அமெரிக்காவைச் சேர்ந்த டைரக்டர் இயக்கிய படம்
''பொன்முடி'' 1950-ஆம் ஆண்டு
தமிழ்த் திரைப் படத்துறையில்
நுழைந்த முதல் காதல் படம் ''பொன்முடி''.
பொன்முடி தமிழ் திரைப்பட உலகில் தொடக்க
காதல் திரை ஓவியம்
என்று கூறலாம். ஸ்ரீதர், பாரதிராஜா திரை
உலக பிரவேசத்திற்குப் பின் இன்றும்
காதலைப் பற்றி பல வெற்றிப்
படங்களும் வெளி வந்துக்கொண்டுதான் இருக்கிறது.
காதல் என்றும் சலிக்காது அல்லது
தெவிட்டாது போலும்.
காதலை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைக்காவியம்

வெற்றி படமாக இன்றும் இருந்து வருகிறது.
இதற்கு முன்னோடியாக 1950-ல் காதல்
படமாக தமிழில் வெளிவந்த
முதல் படம் ''பொன்முடி'' இளம் வயதில்
திறந்த வெளியில் பார்த்த பொன் முடி
இன்றும்

நமது நினைவில் பசுமையாக உள்ளது.

இதில் நரசிம்மபாரதி என்னும் ஒரு நடிகர்
பொன்முடியாக நடித்தார். ஜெமினி கணேசன்
போல்அன்று நரசிம்மபாரதி திகழ்ந்தார்.
பல மங்கையரின் கனவிலும்,நினைவிலும் நிறைந்து
இருந்தவர்.

காதல் நாயகியாக, தேவையாக மாதுரி தேவி
என்னும் ஒரு அற்புத நடிகை நடித்து
இருந்தார்.

டி.ஆர். ராஜகுமாரிக்கு இணையாக நடிகை.
மாதிரி தேவியயின் எழிலும்,கயல்விழியின்
வீச்சிலும் தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர்.
வில்லனாக ஆர். பாலசுப்பிரமணியன் ஆழ்வார் குப்புசாமி
நாயக்கன் என்ற பாகத்தில்
சிறப்பான நடிப்பை வழங்கி இருந்தார்.
ஏழுமலை,கருணாநிதி,காளி என்.இரத்தினம்
போன்றோர்கள் நகைச்சுவை இரட்டை வசனமில்லாது
ஆரோக்கியமான நடிப்பை வழங்கியிருந்தார்கள்.
எம்.ஜி.ஆரின் தமையனார் எம்.ஜி. சக்கரபாணி
வட நாட்டு சந்நியாசி கபாலி என்னும்
மந்திரவாதியாக
நடித்திருந்தார்.

இப்படி பட்ட பண்பட்ட நடிகர்,நடிகையரின் பொருத்தமான
கதாபாத்திரத்தில் பாவேந்தர்பாரதிதாசனின்
எழுத்தில் கதை, வசனத்தில் எதிர்பாராத முத்தம் காவிய திரையாக
வெளிவந்தது.உண்மையானக் காதலுக்கு எ
ன்றும் அழிவில்லை என்பதை அழகு தமிழில், கொஞ்சு
தமிழில் வெளிவந்தது.

அதுவரை தமிழ் சினிமாவில் பேசி வந்த, பிராணநாதா,
சுவாமி, சகியே என்னும் சொல்
இல்லாது,

நல்ல தமிழில் அத்தான்,தோழி,குருவே என்னும்
வளமான தமிழில் மாற்றி முன்னோடியாக
பொன்முடியில் வழி வகுத்தார்.

அந்தக்காலத்தில் தயாரிப்பில் ஜம்பவானாக
இருந்த மார்டன் தியேட்டர் உரிமையான
டி.ஆர். சுந்தரம்
மிக சிறப்பாக தயாரித்து இருந்தார்.

தமிழின் சிறப்பும் காதலின் உயர்வும் ஒருங்கே
அமைத்து உருவாக்கப்பட்ட படம்
பொன்முடியாகும்.

இதில் பெரியாரின் பகுத்தறிவு கொள்கை கலந்த
வசனங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.
ஜி.இராமநாதனின் இனிமையான இசையமைப்பில்
டி.வி. இரத்னம் பாடியுள்ளார். இனிமையான
இசையமைப்பு, பாடல்கள் மக்களின் மனதில் பதிந்து
நீண்ட நாள் நிலைத்து இருந்தது.

வெண்ணிலாவும் வானும் போல என்ற பாடலுக்கு
தண்டாயபாணி மெட்டயமைத்து உள்ளார்.
சிறப்புமிக்க இப்படத்தினை இயக்குனர் எல்லீஸ்
ஆர்.டங்கன் இயக்கி இருந்தார்.

பாரதிதாசனின் கவிதைகளில் " எதிர்பாராத முத்தம் '
துன்பியல் முடிவு கொண்டது.
ஆனால். டி.ஆர். சுந்தரம் பொன்முடியில் அதனை
மாற்றி காதலர்கள் ஒன்று சேர்ந்துமகிழ்ச்சியுடன்
வாழ்வதாக அமைத்தார். துன்பியலை விரும்பாத
மக்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

கிருஷ்ணன்
சிங்கை

No comments: