அன்பினிய நண்பர்களே!
பாவேந்தர் விழா 21ம்தேதி துவங்கும் என்று
அறிவிக்கப்பட்டது தமிழ் உலகில்!
"எள் என்றால் எண்ணெய்"
ஆக வந்து நிற்கும் தமிழ் உலக அன்பர்களை
நினைக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.
20ம்தேதியே அய்யா கிருஷ்ணன், அன்பு,
புதியமாதவி அவர்கள் என்று எல்லோரும்
எல்லோருக்கும் இதில் ஆர்வம் எற்படுத்துகிற
வகையில் எழுதுகின்ற பாங்கு இவர்களையெல்லாம்
தமிழ் உலகம் பெற என்ன தவம் செய்ததோ
என்கிற பூரிப்பை அடைகிறேன்.
விழா நாள் ஒன்பது நாளும் ஒவ்வொருவரும்
தவறாமல் பங்களித்து சிறப்பிக்க வேண்டும் என்ற
அன்பு வேண்டுகோளை வைக்கும் அதே நேரத்தில்
ஏதாவது ஒரு தலைப்பில் (பாவேந்தர் எழுத்துக்களிலிருந்து..
பாவேந்தர் எழுத்தில் விஞ்சி நிற்பது......இதுவா? அதுவா?(உங்கள்
யூகத்துக்கு) பாவேந்தர் மிக விரும்பியது...! .....!)
ஒரு பட்டிமண்டபம் இறுதி மூன்று நாட்களில் நடத்துவோமா?
வேறு ஆலோசனை இருந்தால் தெரிவியுங்கள்.
தாய்மொழித் தொண்டே தவமெனத் தாங்கி
தாய்மொழிப் பண்பின் தனிமையைக் காக்கும்
வாய்மையே தன்னுடை வாழ்வின் உயிர்ப்பாய்
முதுமையிற் புகுந்துள முரண்களை மாற்றி
புதுமையிற் பாடும் புரட்சிக் கவிஞன் புகழ்
பாடுவோம்! விண்ணதிர நம் மன்னவன்
புகழ் பாடுவோம்!
அன்புடன்,
ஆல்பர்ட்.Sun, Apr 20, 2008 at 2:06 PM
Sun, Apr 20, 2008 at 7:50 PM
அன்பினிய அன்பு,
எவ்வளவோ கவிஞர்கள் உலகக் கவிஞர்களோடு
ஒப்பிட்டுப்பாடினாலும், எழுதினாலும்
அவன் புகழ் உலகெலாம் பரவாமைக்குக் காரணம்,
அவருடைய நூல்கள்
எல்லாம் ஆங்கில வழி மொழிபெயர்க்கப்பட்டால்தான்
உலகக் கவிஞர்கள் பார்வையில் பாவேந்தர் யார்
என்பது போய்ச் சேரும்.
இதைச் செய்வது யார்?
-ஆல்பர்ட்.
>>>பாரதிதாசனை உலகக் கவிஞர்கள் பலரோடு
ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளனர்.தமிழ்நாட்டு வால்விட்மன்;|
என்னுந்தலைப்பில் கவிமணி தேசியவிநாயகம் குறிப்பிட்டுள்ளார்.>>>
அன்புடன்,
அன்பு
******************
Sun, Apr 20, 2008 at 7:30 PM
>>>இரத்த உறவுகளை விட என் தாய்மொழி மீதுஎனக்கிருக்கும் நெருக்கமும் காதலும் உரிமையும் எவராலும்பிரிக்கவோ அழிக்கவோ உரிமைக்கொண்டாடவோ முடியாது<<<
சத்தியமான வாசகம். எந்த அளவுக்கு அவர் தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்தார்
என்பதற்கு ஏராளமான சம்பவங்கள் இருக்கிறது.
ஒவ்வொன்றாக இடுகிறேன்.
அன்புடன்,
ஆல்பர்ட்.
*****************
Mon, Apr 21, 2008 at 10:41 AM
பாவேந்தரின் பரம்பரை என்று பல கவிஞர்களைச்
சொல்வார்கள். பல பேருக்கு அவர் ஆசான்.
பல திறனாய்வு நூல்களைக் கடைகளில் பார்த்திருக்கிறேன்.
சிலவற்றையே படிக்க முடிந்திருக்கிறது.
ஆயினும் நீங்கள் மேற்கோளிடுவது போல,
மனித உறவுகளில் தாக்கம் தரும் மெல்லிய இயல்பான
அக உணர்வுகளை ஆழ்ந்து பார்க்க நிறைய இருப்பதாகவே எனக்கும்
தோன்றுகிறது. பல பேர் பாரதிதாசனை "தமிழ் வாழ்க" என்ற அடிப்படையில்
மட்டும் பார்க்கிறார்கள். இவரின் அகப்பாடல்கள் மிகச் சிறந்தன.
சொல்லுக்குள் இவர் கட்டி வைக்கிற வித்தை எனக்கு
இன்னும் புரிபடவேயில்லை.
அன்புடன்
நாக.இளங்கோவன்
*********************
Mon, Apr 21, 2008 at 11:33 AM
அன்பின் ஐயா,
நல்ல கட்டுரை. மு.வவின் மேற்கோள் மிகப் பொருத்தம்.
நாக.இளங்கோவன்
**********************
தமிழ் உலகில் பாவேர்ந்த பாரதிதாசனின் நினைவேந்தல்
மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
நண்பர் ஆல்பர்ட் அவர்களுக்குப் பாராட்டுகள்.
புரட்சிக் கவிஞரின் நினைவு கூர
அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
இன்று அவருக்கு நான் சூடும் தமிழ் மாலை இங்கே!
படிக்க! பாடுக!
* தமிழாரம் உமக்கே!
* *அலைமேவு கரைஓரம் அனலாக நிமிர்ந்தே
... அலமந்த தமிழோர்க்குச் சுடராக விரிந்தாய்
மலைபோலுன் தமிழேந்திப் பகைமோதிப் பலநாள்
... முகமற்றப் பழையோரின் முதலாக மலர்ந்தாய்
வலைசூழ வகைமாறிப் பிழைபோன குடியோர்
... வழிஒன்றி வளமாக வளமார்த்த வளமே
தலைநீள நிலம்வாழ தமிழ்வாழ உழைத்தீர்,
... தமிழ்ப்பாவேந் துனைப்போற்றுத் தமிழாரம் உமக்கே!*
*பிறபாடை குடைந்தாடி முறிவாகி நிலமும்
... பறிபோகப் பதைத்தோரின் பலமான பலமே,
அறநூலைப் புதைத்தாரின் அடையாளம் எழுதி
... அவக்காரம் அவைதீர விதையான விதையே,
மறமார்த்தக் குமுகாய மயக்காறு மடிய
... முடிவான முறையோதி முனையான முனையே,
திறலூற்றுத் திசைமேவி நெருப்பாக நிறைத்தீர்,
... தமிழ்ப்பாவேந் துனைப்போற்றுத் தமிழாரம் உமக்கே!*
----நாக.இளங்கோவன்
வலைப்பதிவுலகில் சிறந்த பணியாற்றி வரும் தமிழ்மணம் திரட்டியில்
நட்சத்திரவாரம் என்ற பகுதியில் இந்த வாரம் எனது ஆக்கங்கள் வருகின்றன.
அதுவும் பாரதிதாசன் நினைவேந்தி மலர்ந்துள்ளது. பார்க்க:
http://thamizmanam.com/
இப்பாடலை தமிழ் ஆர்வலர் நண்பர் திரு.விசுவநாதன் அவர்கள்
மிகக் குறுகிய காலத்தில் இசையமைத்துப் பாடியுள்ளார். அதனையும்
இத்தளம் வழியே எனது பதிவில் கேட்கலாம். திரு.விசுவநாதனுக்கும்
அதற்கு மிகவும் உதவி செய்த நண்பர் திரு.எசென்.இராசா அவர்களுக்கும்
பாரதிதாசன் வைய விரி அவை சார்பாக நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Tuesday, April 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment